ஆன்லைன் ஷாப்பிங் பண்ணுங்க! கார், பைக் டோர் டெலிவரி!!
கோவிட்-19 பரவலால் தற்போது ஊரடங்கு நடைமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. சமூக விலகல் அவசியமான இந்த நேரத்தில் பல நிறுவனங்கள் அதிகம் பேர் கூடுவதை தவிர்த்து வருகின்றன.
வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் ஷோரூம் உங்களை சரிவர திறக்க முடியாத காரணத்தினால் வாடிக்கையாளர்களுக்கு என பிரத்யேகமாக ஆன்லைன் ஷோரூம்களை திறந்துள்ளன.
இதில் நாம் நேரில் சென்று ஒரு வாகனத்தை வாங்குவது போலவே இருக்கும். விருப்பமான வாகனத்தை நாம் தேர்ந்தெடுத்தால் அதன் அத்தனை விவரங்களும் நமக்கு காண்பிக்கப்படும்.
Also Read: மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ் பி.எஸ் 6 பைக் புக்கிங் ஆரம்பம் – ரூ.5000 டோக்கன்
மேலும் அந்த வாகனத்தின் ஆன் ரோடு விலையும் காண்பிக்கப்படும். நாம் இந்த வாகனத்தை ஆன்லைனில் முழு பணம் அல்லது ஈ.எம்.ஐ மூலம் வாங்கிய பிறகு அந்த வாகனம் நமக்கு டோர் டெலிவரி செய்யப்படும். இதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் ஆன்லைனில் மேற்கொள்ளப்படும்.

இதற்கான வசதிகளை ஹீரோ, சுசூகி, மஹிந்தரா, ஸ்கோடா, வேஸ்பா மற்றும் சில நிறுவனங்கள் நடைமுறைபடுத்தி உள்ளன. சில மூன்றாம் நிலை ஆன்லைன் விற்பனையாளர்களும் ஆன்லைனில் வாகனங்களை விற்பனை செய்கின்றனர்.
ஆன்லைன் பைக் ஷோரூம்:
https://booknow.suzukimotorcycle.co.in/vr-showroom
ஆன்லைன் கார் ஷோரூம்:
https://www.buyskodaonline.co.in/default.aspx?utm_source=Website&utm_medium=MenuBar

மூன்றாம் நிலை ஆன்லைன் விற்பனையாளர்கள்:
https://paytmmall.com/shop/search?q=bike&from=organic&child_site_id=6&site_id=2&category=78345
