மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ் பி.எஸ் 6 பைக் புக்கிங் ஆரம்பம் – ரூ.5000 டோக்கன்
விற்பனைக்கு வரவிருக்கும் மஹிந்திரா மோஜோ 300 ஏ.பி.எஸ் பி.எஸ் 6 பைக்கை புக்கிங் டோக்கன் விலை ரூ.5000 கொடுத்து புக்கிங் செய்துகொள்ளலாம்.
இந்த மோஜோ 300 ஏ.பி.எஸ் பி.எஸ் 6 பைக் மேம்படுத்தப்பட்ட சிறப்பம்சங்களுடன், 4 நிறங்களில் வருகிறது. மஹிந்திரா ஷோரூம்களுக்கு சென்று இந்த பைக்கை புக்கிங் செய்து கொள்ளலாம், இதன் விலை சுமார் ரூ.1.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மோஜோ 300 ஏ.பி.எஸ் பி.எஸ்6 பைக் புதிய 295 சி.சி, 1 சிலின்டர், எரிபொருள் இன்ஜக்சன், திரவ குளிரூட்டு பெட்ரோல் இன்ஜினை பெறுகிறது, இந்த இன்ஜின் 26 பி.ஹச்.பி (@7500 ஆர்.பி.எம்) பவரையும், 28 என்எம் (@5500 ஆர்.பி.எம்) டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட டிரான்ஸ்மிஷன் அமைப்பைக் கொண்டது.

இந்த பைக்கில் இரட்டை சேனல் ஏ.பி.எஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. மேலும் டெலிஸ்கோபிக், மோனோ ஷாக் அப்ஷார்பர் கொண்ட சஸ்பென்ஷனை பெரறுகிறது.
பழைய பி.எஸ் 4 மாடலின் தோற்றம் போலவே இந்த மாடலும் வடிவமைக்கப்பட்டுள்ளது, சில மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இந்த பைக் பஜாஜ் டாமினர் 250 பைக்கிற்கு சிறந்த போட்டியாளராக அமையும்.
