அதிக மைலேஜ் தரும் டாப் 5 – BS6 டீசல் கார்கள்
பெட்ரோலை விட டீசலின் விலை குறைவாக உள்ளதால் பலர் டீசல் கார்களை விரும்புகின்றனர், அதிலும் நல்ல மைலேஜ் தரும் டீசல் கார்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
இந்த பதிவில் ARAI சான்றுப்படி அதிக மைலேஜ் தரும் பி.எஸ் 6 டீசல் கார்களை பட்டியிலிட்டுள்ளோம். இந்த பட்டியலில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார்களே அதிக இடம் பெற்றுள்ளன.
5.ஹோண்டா அமேஸ்

ஹோண்டா அமேஸ் கார் இந்த பட்டியலில் 5-ம் இடம் பிடித்துள்ளது. இந்த கார் காம்பேக்ட் செடான் வகை கார் ஆகும். இது 100 hp, 1.5 லி டீசல் இன்ஜின் கொண்டது. இந்த கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.7.56 – 9.96 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)
மைலேஜ்:
மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் – 24.7 kmpl
CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் – 21 kmpl
4.ஹுண்டாய் வெர்னா

ஹுண்டாய் வெர்னா கார் இந்த பட்டியலில் 4-ம் இடம் பிடித்துள்ளது. இந்த கார் செடான் வகை கார் ஆகும். இது 115 hp, 1.5 லி டீசல் இன்ஜின் கொண்டது. இந்த கார் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.10.66 – 15.10 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)
மைலேஜ்:
மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் – 25 kmpl
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் – 21.3 kmpl
3.ஹுண்டாய் கிரேன்ட் i10 Nios

ஹுண்டாய் கிரேன்ட் i10 Nios கார் இந்த பட்டியலில் 3-ம் இடம் பிடித்துள்ளது. இது 75 hp, 1.5 லி டீசல் இன்ஜின் கொண்டது. இந்த கார் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.6.75 – 8.04 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)
மைலேஜ்:: மேனுவல், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் – 25.1 kmpl
2.டாடா ஆல்ட்ரோஸ்

டாடா ஆல்ட்ரோஸ் கார் இந்த பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளது. இந்த கார் பிரீமியம் ஹேட்ச்பேக் வகை கார் ஆகும். இது 90 hp, 1.5 லி டீசல் இன்ஜின் கொண்டது. இந்த கார் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.
விலை: ரூ. 6.99 – 9.29 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)
மைலேஜ்: டாடா ஆல்ட்ரோஸ்– 25.11 kmpl
1.ஹுண்டாய் ஆரா:

ஹுண்டாய் ஆரா கார் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளது. இந்த கார் காம்பேக்ட் செடான் வகை கார் ஆகும். இது 1.2 லி U2 CRDi டீசல் இன்ஜின் கொண்டது. இந்த கார் மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வுகளில் கிடைக்கிறது.
விலை: ரூ.7.74 – 9.23 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)
மைலேஜ்:
மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் – 24.9 kmpl
ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல் – 25.40 kmpl
