ஹூண்டாய் டக்சன் மாடலுக்கான முன்பதிவு தொடங்கியது!
ஹூண்டாய் டக்சன் அக்டோபர் 24 ம் தேதி விற்பனைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சில டீலர்ஷிப்கள் அதிகாரபூர்வமற்ற முன்பதிவுகளை தொடங்கியுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் 25,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் 2016 ஆண்டில் இருந்து வருடா வருடத்திற்கு குறைந்தது இரண்டு மாடல்களை அறிமுகப்படுத்தப் போவதாக வாக்குறுதியளித்துள்ளது. மேலும் இதன் பொருட்டு இந்த வருடம் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் எலாண்ட்ரா செடானை விற்பனைக்கு கொண்டு வந்த ஹூண்டாய் இந்த வருடத்திற்கான மற்றொரு மாடலாக டக்சனை இம்மாத இறுதியில் விற்பனைக்கு கொண்டு வர உள்ளது .
தற்போது மறைமுகமாக முன்பதிவு செய்யப்பட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு எப்போது ஹூண்டாய் டக்சன் டெலிவரி கொடுக்கப்படும் என்ற தகவல்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் நம் எதிர்பார்ப்புப்படி வரும் நவம்பர் மத்தியில் டெலிவரி தொடங்கலாம்.
என்ஜினை பொறுத்தவரை ஹூண்டாய் நிச்சயம் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்டுகளை கொண்டு இருக்கும். எலாண்ட்ரா மாடலில் பயன்படுத்தப்பட்ட 2.0 லிட்டர் திறன் கொண்ட பெட்ரோல் என்ஜின் 152 பிஎஸ் பவரையும் 192 என்எம் டர்க்கையும் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
அதே சமயம் டீசல் என்ஜின் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப பவர் ஃபுல்லான என்ஜினாக இருக்கும்பட்சத்தில் சர்வதேச மார்க்கெட்டில் கிடைக்கும் 2.0 லிட்டர் திறன் கொண்ட 185 பிஎஸ் பவரையும் கிட்டத்தட்ட 400 என் எம் உட்சபட்ச டார்க்கையும் அளிக்கவல்ல டீசல் என்ஜின் உபயோகப்படுத்தப்படலாம்.
ஹுண்டாயின் 2.0 ப்ளூடிக் தாத்பரியத்தில் உருவாக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடல் இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கார் மாடல்களில் ஒன்றாகும். மேலும், ஹூண்டாய் டக்சன் மாடல் கிரெட்டா மாற்றும் சாண்டோபி ஆகிய மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படும் எனவும் தெரிகிறது. ரூ 17.25 லட்சம்(எக்ஸ் ஷோரூம்) விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.
You may also like this : ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் ஹியூண்டாய்!!
