ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம், ‘கொரொனா டீல்!
இந்த நெருக்கடியான காலத்தில் பல வாகன நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கின்றன. எனினும் வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதனைப்பற்றி கடந்த சில பதிவுகளில் பார்த்திருந்தோம்.
ஒரு கார் வாங்கினால் இன்னொரு கார் இலவசம் என்று சொன்னால் அந்த கார் முழுமையாக விற்றுத்தீர்ந்து விடும். ஆம் அப்படி ஒரு ஆஃபர் இப்போது வந்துள்ளது.
ஆம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனம் சாண்டா ஃபீ மாடல் காரை வாங்கினால் ரீய்னா என்ற செடான் வகை கார் இலவசம் என அறிவித்துள்ளது.
சாண்டா ஃபீ காரின் விலை – ரூ.38 லட்சம், இதற்கு இலவசமாக வழங்கப்படும் காரின் மதிப்பு சுமார் – ரூ.10-12 லட்சம்.
ஹூண்டாய் வென்யூ, விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்!
கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டுள்ள பொது முடக்கத்தால் பல இழப்புகள் இருந்தாலும் இது போன்ற சில சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. பண பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடைபெறவும் இந்த சலுகைகள் வழிவகை செய்கின்றன.
மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கும் பொருந்தும் இந்த ஆஃபரில் காரை வாங்க பிலிப்பைன்ஸ் தான் போகவேண்டும், ஆனால் நம்மூரில் இப்படி ஆஃபர் வந்தால் கண்டிப்பாக தெரியப்படுத்துகிறோம்!
ஹூண்டாய் கிராண்ட் ஐ10, விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்!
