ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தும் ஹியூண்டாய்!!

கொரிய நிறுவனமான ஹியூண்டாய் தனது டக்சன் மற்றும் 2017 வெர்னா உள்ளிட்ட தனது புதிய மாடல்களில் மைல்ட் ஹைப்ரிட் எனப்படும் ஆரம்பநிலை ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவ்தற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

இத்தொழில்நுட்பமானது அதிநவீன வசதிகளான ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், ப்ரேக் எனர்ஜி மற்றும் டார்க் அஸிஸ்ட் போன்ற அதிநவீன வசதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அறிவித்துள்ளது.

குறிப்பாக எந்தெந்த மாடல்களில் இதொழில்நூடபங்களில் அறிமுகப்படுத்துகிறது என்ற விரிவான தகவல்கள் தற்போதைக்கு இல்லை என்றாலும், இந்தியா போன்ற வளரும் நாடுகளில் காற்று மாசுபாடு பற்றிய விழிப்புணர்வு அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டால் வெகு விரைவில் இத்தொழில் நுட்பம் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட வாய்ப்புகள் அதிகம்.

குறிப்பாக டெல்லி, மும்பை மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களில் காற்று மாசுபாடு மிக அதிக அளவில் சுற்று சூழலை மோசமாக பாதித்து வரும் நிலையில் இதுபோன்ற தொழில்நுட்பங்கள் வரப்பிரசாதமாக அமையும். இவற்றையெல்லாம் விட அதிகளவு எரிபொருள் சிக்கனம் நாட்டுக்கு மட்டுமல்ல நம் பாக்கெட்டுக்கும் நல்லது.

hyundai-tucson_mild-hybrid

மேலும் ஹியூண்டாய் தனது மாடல்களில் ஐஎஸ்ஜி(ISG) எனப்படும் இன்ட்டிலிஜென்ட் ஸ்டாப் அண்ட் கோ வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இதொழில்நுட்பமானது கார் என்ஜின் இயக்கத்தில் இல்லாத போது தானாகவே அணைந்து விடும் மற்றும் கிளட்சை மிதிக்கும் போது என்ஜின் ஸ்டார்ட் ஆகிவிடும். இதன்மூலம் கிட்டத்தட்ட 15 சதவீத எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாதம் மூன்று முறை பெட்ரோல் விலை ஏறும் நம்நாட்டில் இதொழில்நுட்பம் நல்ல வரவேற்பை பெரும் என்பதில் ஐயமில்லை.

தற்போது இந்திய மார்க்கெட்டில் மாருதி சியாஸ் மட்டுமே இதொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. மேலும் பிரேக் பிடிக்கும் போது உருவாகும் ஆற்றலை சேமித்து வைத்து உபயோகப்படுத்தும் வசதியும் இம்மாடல்கொண்டுள்ளது. வெர்னா தனது முதல் இடத்தை பிடிக்க வேண்டுமானால் இத்தகைய வசதிகள் மிகவும் அவசியம் என்பதை ஹியூண்டாய் உணர்ந்துள்ளது.

ஆரோக்கியமான போட்டிதான்!