ஒரு லட்சம் ரூபாய் வரை விலையை குறைத்த ஹார்லி டேவிட்சன்
ஹார்லி-டேவிட்சன் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் ராட் மாடல் க்ரூஸர் பைக்கின் விலை ரூ.70,000 வரை குறைந்துள்ளது. ரூ.6.7 லட்சம் விலையில் இருந்த இந்த பைக் தற்பொழுது ரூ.5.99 லட்சத்திற்கு கிடைக்கிறது.
இதன் பி.எஸ்6, 749 சி.சி, ஏர் கூல்டு, ஹை அவுட்புட் ரெவல்யூசன் X™ V-Twin இன்ஜினானது கிட்டத்தட்ட 55 ஹச்.பி பவரையும், 60 நி/மீ (@ 4250 ஆர்.பி.எம்) டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த சொகுசு மாடல் பைக் ஓட்டுவதற்கு மிகவும் வசதியா இருக்கும். இந்த பைக்கை தற்போது ஆன்லைனில் புக்கிங் செய்துகொள்ளலாம், டெஸ்ட் டிரைவும் புக்கிங் செய்து கொள்ளலாம்.

மேலும் ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது, இதன்படி MY20H-D ஸ்போர்ட்ஸ்டர் மற்றும் சாஃப்ட்டெயில் வண்டிகளை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது ரூ.90,000 முதல் ரூ. 1.5 லட்சம் வரை சலுகைகள் கிடைக்கும்.
ஈ.எம்.ஐ திட்டத்திலும் இந்த பைக் கிடைக்கும், 2-ன்ஸ் பைக்குகளையும் இந்நிறுவனத்தின் மூலமாக வாங்கிக்கொள்ளலாம்.

மேலும் பாதுகாப்பு துறையை சார்ந்த கேன்டின் ஸ்டோர் டிபார்ட்மெட்டில் (போலீஸ் மற்றும் ராணுவத்தினருக்கானது) ரூ.5.65 லட்சத்திற்கு கிடைக்கிறது.
ஈ.எம்.ஐ மற்றும் பைனான்ஸ் – https://www.ride-india.in/
டெஸ்ட் டிரைவ் – https://testride.harley-davidson.asia/en_IN?utm_source=HDWebsiteMainNav
