இனிமே டாக்ஸியில் பார்க்கலாம்! குட்டி விமானங்களை களமிறக்கும் உபேர்
கோலிவுட்டில் அலாவுதின் அற்புத விளக்கு படத்தில் வரும் பறக்கும் கம்பளம், ஹாலிவுட்டில் அவென்ஜர்ஸ் படத்தில் வரும் பறக்கும் கப்பல் மற்றும் நிஜத்தில் உள்ள விமானம், ஹெலிக்காப்டர், ஜெட் என வான்வழியாக மக்களை ஏற்றி செல்லும் வானூர்திகள் அனைத்தும் மக்களின் பயணத்தை எளிதானதாகவும், விரைவானதாகவும் மாற்றுகிறது..
பல நிறுவனங்கள் பறக்கும் வாகனங்களை தயாரிக்கின்றனர். இந்த வரிசையில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஹுண்டாய் நிறுவனமும், வாகனங்களை வாடகைக்கு இயக்கும் உபெர் நிறுவனமும் இணைந்து பறக்கும் எலக்ட்ரிக் டேக்ஸியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பறக்கும் எலக்ட்ரிக் டேக்ஸியானது 290 கி.மீ/மணி என்ற அதிகபட்ச வேகத்தில் 300-600 மீட்டர் உயரத்தில் பறந்து செல்லும் திறன் கொண்டது, மேலும் இந்த டேக்ஸி மின்சக்தியால் இயங்குகிறது. முழு சார்ஜில் சுமார் 96 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த டேக்ஸி மக்கள் டிராஃபிக்கில் மாட்டிக்கொள்ளாமல், போகக்கூடிய இடத்திற்கு விரைவாக சென்று மக்களின் நேரத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த டேக்ஸிக்கு நான்கு சுழலும் காற்றாடிகள் இருந்தாலும் ஹெலிகாப்டர்களை விட குறைந்த அளவு சப்தம் வெளியாகும், இதில் 4 பேர் பயணிக்கலாம், முழுவதும் தானியங்கி இயக்கத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.







