மிரள வைத்த மே மாதம்! மிகப்பெரிய சரிவை சந்தித்த கார் நிறுவனங்கள்
இந்திய கார் நிறுவனங்கள் இந்த வருடம் விற்பனையில் பெரும் சரிவை சந்தித்துள்ளனர். கொரானா வைரஸ் பரவலின் காரணமாக கார்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டது, மேலும் ஊரடங்கு உத்தரவால் சரியாக விற்க முடியாததால் கார்களின் விற்பனை மே மாதத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
ஏப்ரல் மாதம் கார்களில் ஒரு யூனிட் கூட விற்கப்படவில்லை. மே மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கார்களின் விற்பனை ஓரளவு நடைபெற்றது. எனினும் குறைந்த அளவு வாடிக்கையாளர்கள் மட்டுமே கார்களை வாங்கியதால், எதிர்பார்க்கப்பட்ட அளவு கார்கள் விற்பனையாகவில்லை.
Read this : களையிழந்த சர்வதேச மோட்டர் சைக்கிள் தினம்
விற்பனை விவரம்:
| கார் நிறுவனங்கள் | விற்பனை செய்த மொத்த கார்கள் – மே மாதம் | விற்பனை % |
|---|---|---|
| மாருதி சுசுகி இந்தியா | 13865 | -82% சரிவு |
| டொயோட்டா | 1639 | -76.6% சரிவு |
| மஹிந்திரா | 9560 | -79%சரிவு |
| ஹூண்டாய் | 12583 | -78.7%சரிவு |
| ** மற்ற கார் நிறுவனங்களின் விற்பனை விவரம் சரியாக வெளியிடப்படவில்லை | ||
இப்பொழுது மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் கார் நிறுவனங்கள் உற்பத்தி வேலைகளை தொடங்கியுள்ளது. இந்த மாதம் கார்களை அதிகமாக விற்பனை செய்ய அனைத்து கார் நிறுவனங்களும் முயற்சி செய்யும், கார்களின் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது, வாடிக்கையாளர்களை கவர பல வழிமுறைகளை கார் நிறுவனங்கள் கையாளும்.
அலுவலகங்களை மூடும் ராயல் என்பீல்டு நிறுவனம்
