அலுவலகங்களை மூடுகிறதா ராயல் என்பீல்டு நிறுவனம் ?
இரு சக்கர வாகன உற்பத்தியாளர் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் செலவுக் குறைப்பு நடவடிக்கையாக சில பிராந்திய அலுவலகங்களை மூட முடிவு செய்துள்ளதாக ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்கான், சென்னை, பெங்களூர், மும்பை, ஜார்கண்ட், ஹைதராபாத், புவனேஷ்வர் மற்றும் சில இடங்களில் உள்ள அலுவலகங்கள் உடனடியாக மூடப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
முக்கிய இடங்களில் உள்ள அலுவலகங்களை தற்காலிகமாக மூடிவிட்டு, அலுவலகத்தில் பணிபுரிபவர்களை வீட்டிலிருந்தே பணிகள் (விற்பனை மற்றும் சர்வீஸ்) செய்ய சொல்லியிருக்கிறது.
நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி (சி.சி.ஓ) லலித் மாலிக் இதனை உறுதிப்படுத்தினார். “நாங்கள் சில பிராந்திய அலுவலகங்களை மூட இருக்கிறோம், ஆனாலும் அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் வீட்டிலிருந்து தொடர்ந்து வேலை செய்வார்கள். இது எங்கள் பிராந்திய ஊழியர்களின் பயண நேரத்தை மிச்சப்படுத்தும்” என்று மாலிக் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதால், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க செலவுகளை குறைத்து பணத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தில் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் மார்ச் மாதத்தில் ”ஸ்டுடியோ ஸ்டோர்ஸ்” என்று அழைக்கப்படும் 100 புதிய சிறிய வடிவ ஷோரூம்-கம்-சர்வீஸ் ஸ்டோர்ஸ்-களை திறந்துள்ளது
இந்த ஸ்டுடியோ ஸ்டோர்கள் ஒரு நகரத்தில் உள்ள ஒரு பெரிய வடிவமைப்புக் கடைக்கான செலவுகளில் பத்தில் ஒரு பங்கு அளவில் மட்டுமே செயல்படுவதால், ஒரு கடையை இயக்குவதற்கான செலவுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
You may also like this: ராயல் என்பில்டு தண்டர்பேர்டு எக்ஸ் மாடலுக்கான ஆக்சஸரிஸ்கள் அறிமுகம்!!
