பாலைவனத்தில் பைக் ஓட்ட ஆசையா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

9 நாட்கள் நடக்கும் இந்த டெஸர்ட் டிரையல் டிசம்பர் 17 தேதி துவங்குகிறது. மஹிந்திரா மோஜோ ட்ரைப் மாடல் மூலம் நடத்தப்படும் இந்த சாகச பயணம் ஜெய்பூரில் தொடங்கி அகமதாபாத்தில் நிறைவடைகிறது. இதில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு வாடிக்கையளாரும் குறைந்தது 2300 கிமீ தூரம் பைக் ஒட்டும் வாய்ப்பை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தால் நடத்தப்படும் முதல் பயண நிகழ்ச்சி இதுவாகும். இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன. விருப்பமுள்ள வாசகர்கள் மஹிந்திரா மோஜோ இணையதளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த பயணம் சவால்கள் நிறைந்த சாலைகளையும், கடினமான சீதோஸ்ன நிலைகளையும் கொண்டிருக்கும் எனவும், ஜெய்சால்மார் துறைமுகம், ஊத்தர்லாய், பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள லாங்கேவாலா, சாம் சேன்ட் டுன்ஸ் மற்றும் ரான் ஆஃப் கட்ச் போன்ற பகுதிகளின் ஊடாக பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணம் நிச்சயம் நல்ல அனுபவமாக அமையும். பல்வேறு காலநிலை, பல்வேறு மக்கள், மற்றும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை என அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

இந்த பயணத்தில் பயன்படுத்தப்படும் மோஜோவின் 295சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் என்ஜின் 6 ஸ்பீட் கியர்பாக்ஸ் உடன் 28 பிஎஸ் பவரையும், 30 என்எம் உட்சபட்ச டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது.

மேலும் பயணத்தின் முடிவில் மஹிந்திரா மோஜோ வின் சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.