புதிய 2017 கவாஸகி Z1000R வெளியானது!!!

2017 ஆம் ஆண்டிற்கான கவாஸகி Z1000 மாடலின் பிரபலமான R எடிசன் தற்போது புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மிகப்பெரிய சூப்பர் பைக் வாடிக்கையாளர்கள் வட்டத்தை கொண்ட கவாஸகி, நின்ஜா H2 மற்றும் நின்ஜா 650 ஆகிய மாடல்களை தொடர்ந்து தற்போது Z1000R யூரோ IV மாசுக்கட்டுபாட்டு விதிகளின் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயம் என்ஜின் திறன் மற்றும் கையாளுமை என எதுவும் யூரோ 4 விதிகளுக்காக குறைக்கப்படாமல் மேம்படுத்தப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு. இதை தவிர சில முக்கியமான பாகங்களும் மாற்றப்பட்டுள்ளன.

kawasaki-z1000-r-2017

கவாஸகி Z1000R மாடலின் பிரேக்கிங் சிஸ்டம் 310மிமீ விட்டம் கொண்ட பிரெம்போ M50 முன்புற டிஸ்க்குகளால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த செயல்திறனை வழங்ககூடியவை. அதே போல் S46DR1S வகையை சேர்ந்த முழுவதும் அட்ஜஸ்ட் செய்து கொள்ளக்கூடிய மோனோஷாக் சஸ்பென்சன் அமைப்பும் முன்புறம் 41மிமீ விட்டம் கொண்ட யூஎஸ்டி ஃபோர்க்குகளையும் கொண்டுள்ளது. சீரான பவர் டெலிவரியை வழங்கும் பொருட்டு இசியூ அமைப்பையும் மேம்படுத்தியுள்ளது.

கவாஸகி Z1000R மாடலின் இன்ஸ்ட்ரூமன்ட் கண்சோல் தற்போது கியர் பொசிஸன் பற்றிய தவல்களையும் அளிக்கும் வகையில் மேம்படுத்தியுள்ளனர். புதிய மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் மற்றும் மெட்டாலிக் கிராபைட் கிரே வண்ணங்களுடன் கூடிய தனித்துவமான பாடி கிராபிக்ஸ்கள் R எடிசனை ஸ்டாண்டர்டு வேரியண்டிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

kawasaki-z1000-2017

கவாஸகி Z1000R மாடல் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு மத்தியில் CPU(Complete Built Unit) முறையில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.