2016 EICMA : கவாஸகி Z900 அறிமுகம் !
கவாஸகி தற்போது விற்பனையில் இருக்கும் Z800 மாடலுக்கு பதிலாக Z900 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது.
இப்புதிய Z900 ஸ்ட்ரீட் ஃபைட்டர் சில பாடி அப்டேட்டுகள் மற்றும் புதிய ட்ரல்லிஸ் பிரேம்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும்Z900 மாடல் 948 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 ட்வின் சிலிண்டர் மோட்டார் என்ஜினை கொண்டுள்ளது.

இந்த என்ஜின் 125 பிஸ் பவரையும் 98.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. ஆறு ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்புடன் 525 மாடலாளான செயின் டிரைவ் சிஸ்டத்தை கொண்டுள்ளது. 2017 கவாசகி Z900, 41 மிமீ இன்வெர்ட்டருடன் கூடிய பின்புற போர்க்குகள் மற்றும் கிடைமட்ட அமைப்பு கொண்ட மோனோ ஷாக் சஸ்பென்சன், முன்புறம் 300 மிமீ சிங்கிள் பிஸ்டன் கேளிபருடன் கூடிய டிஸ்க் மற்றும் நிரந்தர அம்சமாக ABS வசதி போன்றவை கொடுக்கப்பட்டுள்ளன.
புதிய 2017 கவாஸகி Z900 பிரிமியம் விலையில் Z800 மாடலை விட 50,000 முதல் 1 லட்சம் வரை கூடுதல் விலையுடன் CBU (complete Built Unit) முறையில் அடுத்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
