கபாலி பாணியில் மஹிந்திரா சென்ச்சுரோ ஸ்பெசல் எடிசன் அறிமுகம் !
மஹிந்திரா நிறுவனம் கபாலி பட பாணியில் விளம்பரத்தில் இறங்கி உள்ளது. பாலிவுட் படமான Mirzya என்ற படத்தின் பெயரில் ஸ்பெசன் ஏடிசனை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த மிர்ஷியா ஸ்பெசன் ஏடிசன் புதிய ஸ்பெஷல் கிராபிக்ஸ் பெட்ரோல் டேங்க் மற்றும் முன்புறம் ஆகிய பகுதிகளில் மிர்ஷியா பிராண்டிங் ஒட்டப்பட்டுள்ளது. இந்த ஸ்பெசல் ஏடிசன் பற்றி மஹிந்திரா நிர்வாக இயக்குநர் திரு. வினோத் கூறுகையில் இந்தியாவில் முதல் முறையாக இருசக்கர வாகனத்திற்கு இத்தகைய ஸ்பெசல் ஏடிசனை அறிமுகம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. இப்புதிய படம் போலவே இந்த பைக்கும் நிச்சயம் வரவேற்பை பெறும் என்றார்.
பாடிகிராபிக்ஸ் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க மாற்றமும் அறிமுகப்படுத்தபடவில்லை. இந்த சென்ச்சுரோவின் என்ஜின் 106.7 சிசி திறனுடன் 8.5 பிஎஸ் பவரையும் 8.5 என்எம் டார்க்கையும் அளிக்க வல்லது. மேலும் அலாய் வீல்கள் பின்புற எல்இடி விளக்குகள் போன்றவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த புதிய சென்ச்சுரோ மிர்ஷியா ஸ்பெசல் எடிசனின் விலை விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
