5 லட்சத்திற்கும் குறைவான விலையில் நல்ல மைலேஜ் தரும் கார்கள்!

குறைந்த விலையில் நல்ல மைலேஜ் தரும் காரை வாங்க இருப்பவர்களுக்காகவே இந்த பதிவு. இதில் உள்ள அனைத்து கார்களும் 20 கி.மீ-க்கு மேல் மைலேஜ் தரக்கூடியவை, விலையும் குறைவு.

3.டஸ்டன் Redi-GO A

இந்த கார் 5 சீட்டர் ஹேட்ச்பேக் கார், இதன்  சென்னை, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ3.61 லட்சம் மட்டுமே, ஆன்-ரோடு விலை ரூ. 4.30 லட்சம் மட்டுமே.

இந்த கார் 20.7 கி.மீ/லி மைலேஜ் தரும், இதில் ஏ.பி.எஸ், ஈ.பி.டி, ஏர்பேக், ஏ.சி, ஹீட்டர் போன்ற வசதிகள் உள்ளன.

இதன் பி.எஸ்6, 799 சி.சி, 3 சிலிண்டர், 0.8 லி DOHC பெட்ரோல் இன்ஜினானது 53.6 பி.ஹச்.பி என்ற அதிகபட்ச பவரை 5600 ஆர்.பி.எம் மற்றும் 72Nm என்ற அதிகபட்ச டார்க்கை 4250 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும்.

 

2.மாருதி ஆல்டோ 800 LXI

இந்த கார் 5 சீட்டர் ஹேட்ச்பேக் கார், LXI வேரியண்ட் அதிகமாக விற்பனையாகும் வேரியண்ட் ஆகும். இதன் சென்னை, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ3.58 லட்சம் மட்டுமே, ஆன்-ரோடு விலை ரூ. 4.15 லட்சம் மட்டுமே.

மாருதி ஆல்டோ 800, 22 கி.மீ/லி மைலேஜ் கொடுக்கிறது. இதில் ஏ.பி.எஸ், ஏர்பேக், ஏ.சி, ஹீட்டர் போன்ற வசதிகள் உள்ளன.

இதன் பி.எஸ்6, 796 சி.சி, 3 சிலிண்டர், F8D DOHC பெட்ரோல் இன்ஜினானது 47.3 பி.ஹச்.பி பவரை 6000 ஆர்.பி.எம் மற்றும் 69 Nm என்ற அதிகபட்ச டார்க்கை 3500 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.

 

1.ரெனால்ட் க்விட் பிஎஸ் 6 RXE

இந்த கார் 5 சீட்டர் ஹேட்ச்பேக் கார், இந்த காரின் சென்னை, எக்ஸ்-ஷோரூம் விலை ரூ3.74 லட்சம் மட்டுமே, ஆன்-ரோடு விலை ரூ. 4.47 லட்சம் மட்டுமே.

ரெனால்ட் க்விட்,  25.17 கி.மீ/லி மைலேஜ் கொடுக்கிறது, இதில் ஏ.பி.எஸ், ஈ.பி.டி, ஏர்பேக், ஏ.சி, ஹீட்டர், ஸ்பீக்கர்கள், எல்.இ.டி பகல்நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் டெயில் விளக்குகள் போன்ற வசதிகள் உள்ளன.

ரெனோ க்விட் 1.0 டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

இதன் பி.எஸ்6, 799 சி.சி, 3 சிலிண்டர், DOHC பெட்ரோல் இன்ஜினானது 53.3 பி.ஹச்.பி அதிகபட்ச பவரை 5678 ஆர்.பி.எம் மற்றும் 72Nm டார்க்கை 4386 ஆர்.பி.எம்-ல் வெளிப்படுத்தும்.