மந்தமான விற்பனை! சலுகைகளை அள்ளி வீசும் நிறுவனங்கள்!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடந்த இரு மாதங்களில் ஊரடங்கு உத்தரவால் மிகப்பெரிய சரிவை சந்தித்தன. விற்பனை மிகவும் மந்தமாக இருந்தது, இதனை ஈடு கட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஈ.எம்.ஐ கட்ட கால அவகாசம், ஆன்லைனில் வாங்கும் வசதி, டோர் டெலிவரி போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்தன. இதனால் விற்பனை ஓரளவு முன்னேற்றம் கண்டுள்ளது.

Also Read: நீங்கள் கார் வாங்க நினைத்திருந்தால் இதுவே சரியான நேரம்!

வாகன உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை விவரத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

நிறுவனங்கள் விற்பனை செய்த மொத்த யூனிட்கள் கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்குமான ஒப்பீடு
மாருதி சுசூகி இந்தியா 53918 56.80 % சரிவு
மஹிந்திரா 14417 66.10% சரிவு
பஜாஜ் ஆட்டோ 234851 42% சரிவு
ஹீரோ மோட்டர் கார்‌ப் 388411 37% சரிவு
டிவிஎஸ் மோட்டர் 175260 41% சரிவு
அஷோக் லயலேன்ட் 2596 79.70% சரிவு
ஈச்சர் 1801 60% சரிவு
ராயல் என்பீல்டு 35003 40% சரிவு

தற்போது நிலவும் சூழலில் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏற்பட்ட சரிவு தொடரும் என துறை சார் வல்லுனர்கள் கணித்துள்ளனர். மேலும் பல சலுகைகளை நிறுவனங்கள் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:  ”6 மாதம் கழித்து பணம் கட்டினால் போதும்” – புது ஈ.எம்.ஐ திட்டம் டி.வி.எஸ் எக்ஸ்.எல் 100