நீங்கள் கார் வாங்க நினைத்திருந்தால் இதுவே சரியான நேரம்!
கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக இந்தியாவில் இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெருமளவு சரிவை சந்தித்து உள்ளன. பல வாகன உற்பத்தி நிறுவனங்களின் விற்பனை குறைந்த அளவிற்கு அதாவது பூஜ்ஜியத்துக்கு சென்றதால் வரலாற்றில் மிக மோசமான நிலையை சந்தித்தது.
இப்போது சில தளர்வுகள் இருப்பதால் வாகன உற்பத்தி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர பலவிதமான சலுகைகளை அறிவித்துள்ளது, எனவே நீங்கள் கார் வாங்க நினைத்திருந்தால் இதுவே சரியான நேரம் !!!
100% ஆன் ரோடு நிதி வசதி, இ.எம்.ஐ கட்ட கால அவகாசம், டிஸ்கவுண்ட் போன்ற பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
மாருதி சுசுகி:
இந்நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு லோன் கட்டுவதில் அதிக காலஅவகாசம், குறைந்த வட்டி விகிதம் மற்றும் குறைந்த அளவு டவுன் பேமண்ட் ஆகிய சலுகைகளை அறிவித்துள்ளது.
ஹுண்டாய்:
இந்நிறுவனம் இந்த காலகட்டத்தில் தனியார் துறையில் வேலை செய்யும் வாடிக்கையாளர்கள் வேலை இருந்திருப்பின் அவர்களுக்காக 3 மாத கடன் தவணையை செலுத்த தேவையில்லை என்ற சலுகையை அறிவித்துள்ளது.
டாடா:
இந்நிறுவனம் அதிக கால அவகாசம் கொண்ட இ.எம்.ஐ திட்டம், தேவைக்கேற்ப இ.எம்.ஐ திட்டத்தை மாற்றிக்கொள்ளும் வசதி, 100% ஆன் ரோடு நிதி வசதி மேலும் கொரேனாக்கு எதிராக போராடும் மருத்துவர்கள், மருத்துவ துறையினர், காவல்துறையினர் ஆகியோருக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
டயோட்டா & ஸ்கோடா:
இந்நிறுவனங்கள் 0 டவுன் பேமென்ட் சலுகையை அறிவித்துள்ளது. (சிபில் புள்ளிகள் அடிப்படையில்) ஸ்கோடா நிறுவனம் முதல் 4-6 மாத அளவிற்கு இ.எம்.ஐ கட்டுவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
ஹோண்டா:
இந்நிறுவனம் எக்ஸ்சேஞ்ச் வசதி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சில மாடல்களுக்கு ரூ. 1 லட்சம் வரை தள்ளுபடி ஆகிய சலுகைகளை அறிவித்துள்ளது.
எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த காரை உங்களுக்கு சொந்தமாக்குங்கள் அல்லது பழைய காரை மாற்றுங்கள்.
