606.4 கிமீ வேகத்தில் பறக்கும் ட்ரீம் ராக்கெட் ஸ்டீரீம்லைனர்!
இங்கலந்தைச் சேர்ந்த டிரிம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது இன்பர் ராக்கெட் ஸ்டீரீம்லைனர் வாகனம் மூலம் இந்த சாதனையை படைக்க உள்ளது.
டிரிம்ப்மோட்டார் சைக்கிள் ஏற்கனவே இந்த மாத தொடக்கத்தில் 274 மைல் ( 438.38கிமீ ) வேகத்தை கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இச்சாதனையை நிகழ்த்த போகிறவர் டூரிஸ்ட் டரோப்பி புகழ் கை மார்ட்டின் ஆவார். தற்போதிய சாதனையானது ராக்கி சாபின்சன் என்பவரால் கடந்த 2010 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்டது. இவர் 376.363 மைல் (605.697 கிமீ ) வேகத்தில் 11 மைல் தூரம் கடந்தே சாதனையாக உள்ளது.
இந்நிகழ்வை பற்றி மைக் குக் கூறுகையில் சீதோஷ்ண நிலையை பொறுத்து அதிகவேக ஒட்டுதல் தரத்திற்காக இச்சோதனையானது செப்டம்பர் மாத(இம்மாதம்) வாக்கில் நிகழ்த்தப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.
