சுஸுகி GSX-R150 மற்றும் GSX-S150 மாடல்கள் விரைவில்!!!
சுஸுகியின் GSX-R150 மற்றும் GSX-S150 மாடல்கள் சமீபத்தில் ஜகார்டா நகரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுஸுகி நிறுவனத்தின் இந்தோனேசிய பிரிவான பிடி சுஸுகி இந்தோமொபி சேல்ஸ்(SIS) இப்புதிய மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. இவ்விரு மாடல்களும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட GSX-125 மற்றும் GSX-250 ஆகிய மாடல்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்ப உதவும் என சுஸுகி நிறுவனம் எதிர்பார்க்கிறது.
GSX வரிசையின் மற்ற மாடல்களை போலவே என்ஜின் திறனை தவிர சேஸிஸ் மற்றும் இதர வசதிகள் என அனைத்திலும் எந்தவித வேறுபாடும் இல்லை. அதே சமயம் GSX 150 மாடல் ஸ்ட்ரீட் பைக் வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து முகப்பு விளக்கு மற்றும் மாஸ்க் போன்றவை மாற்றம் பெற்றுள்ளன.
இரண்டு மாடல்களுமே புத்தம் புதிய 147சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் என்ஜின், DHOC லிக்விட் கூல்ட் அமைப்பை கொண்டுள்ளது. அதே போல் 10,400 ஆர்பிஎம் மில் 19.4பிஎஸ் பவரையும் 9,000 ஆர்பிஎம் ல் 14 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்யவல்லவை என்பது குறிப்பிடத்தக்கது.

6 ஸ்பீட் ட்ரான்ஸ்மிசன் கொண்ட என்ஜின், ஃப்யுல் இன்ஜெக்சன் ஸிஸ்டம் மூலம் சீரான பவர் டெலிவரியை பெறுகிறது. தோற்றத்தை பொருத்தவரை புதிய பருத்த பெட்ரோல் டேங்குகள், ஸ்ப்லிட் ஸீட் அமைப்புடன் சற்று உயர்த்தப்பட்ட பில்லியன் இருக்கைகள் மற்றும் முழுவதும் எல்இடி விளக்குகளால் ஆன எலெக்ட்ரானிக் சிஸ்டம் போன்றவை கவனத்தை ஈர்க்கின்றன.
இந்த இரு மாடல்களும் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தோனேசிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் நாளை முதல்(நவம்பர் 5) இத்தாலியில் தொடங்கவிருக்கும் EICMA மோட்டார் ஷோவில் காட்சிபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பொருத்தவரை ஏற்கனவே கிக்ஸர் வரிசை மாடல்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்து வரும் நிலையில் தற்போதைக்கு இங்கு இப்புதிய மாடல்கள் அறிமுகமாவதற்கு வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
