ஐரோப்பாவில் கால்பதிக்க தயாராகும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன்!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அட்வென்ச்சர் டூரர் மாடலான ஹிமாலயன் பைக்கை 2016 EICMA மோட்டார் ஷோவில் காட்சிபடுத்த உள்ளது.
இந்தியாவை தாயகமாக கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்த வருட தொடக்கத்தில் ஹிமாலயன் டூரர் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது. மேலும் ஹிமாலயன் மாடல் தான் இந்தியாவின் முதல் அட்வென்ச்சர் மாடல் ஆகும். தற்போது EICMA மோட்டார் ஷோவின் மூலம் ஐரோப்பாவில் கால்பதிக்க தயாராகி வருகிறது.
கடந்த இரு வருடங்களாக ஐரோப்பிய மார்க்கெட்டில் குறைந்த அளவிலான டிஸ்ப்லேஸ்மண்ட், குறைவான எடை, பயணங்களுக்கு எளிதாக உபயோகப்படக் கூடிய அட்வென்ச்சர் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதை தொடர்ந்து ராயல் என்ஃபீல்டு இந்த முடிவை எடுத்துள்ளது.

மேலும் அவசியமில்லாத பாகங்களை நீக்குவதன் மூலம் எடை குறைப்பை சாத்தியப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் இருக்கை உயரம் முடிந்த அளவுக்கு 800 மிமீ ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஐரோப்பிய மார்க்கெட்டிற்கு ஏற்றாற் போல் யுரோ IV எமிசன் கன்ட்ரோல் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை ஸ்டாண்டர்டு அம்சமாக இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 சிசி திறன் கொண்ட ஏர் கூல்ட், சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 24.5 பிஎஸ் பவரையும் 32 என்எம் டார்க்கையும் அளிக்கும் சக்தி கொண்டது. அதிர்வுகளை குறைக்கும் வகையில் என்ஜின் கவுண்ட்டர் பேலன்சர் அமைப்புடன் மேம்படுத்தபட்டுள்ளது. ஆன் ரோடு மற்றும் ஆப் ரோடு இரண்டிற்கும் ஏற்ற வகையில் சியட் நிறுவனத்தால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட டயர்களுடன் 21 இன்ச் ஸ்போக்ஸ் வீல்களை முன்புறமும், 18 இன்ச் ஸ்போக்ஸ் வீல்களை பின்புறமும் கொண்டுள்ளது.
ஹிமலயான் தற்போது 182கிலோ எடையுடன் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க்கும் கொடுக்கப்பட்டுள்ளது.
