ராயல் என்பில்டு கிளாசிக் 500 பெகாஸஸ் நாளை அறிமுகம்!!
ராயல் என்பில்டு நிறுவனம் தனது புதிய மாடலான கிளாசிக் 500 பெகாஸஸ்(Classic 500 Pegasus) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. லிமிட்டட் எடிசன் மாடலாக வெளிவர உள்ள கிளாசிக் பெகாஸஸ் இந்தியாவிற்கு 250 யூனிட்டுகள் (மொத்தம் 1000) ஒதுக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 லட்ச ரூபாய் விலையில் எதிர்பார்க்கப்படும் கிளாசிக் பெகாஸஸ் பைக்கை இந்தியாவில் எந்த டீலர்ஷிப்பிலும் வாங்க முடியாது. ஹிமலயன் ஸ்லீட்(RE Himalayan Sleet) மாடலை போல ஆன்லைனில் மட்டுமே வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரமே பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்ட பெகாஸஸ், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து படைவீரர்களால் பயன்படுத்தப்பட்ட ராயல் என்பில்டு WD 125 ஃப்லையிங் ஃப்லீ(Flying Flea) மாடலின் சாயல் தென்படுகிறது. இந்தஃப்லையிங் ஃப்லீ பைக் வெறும் 59 கிலோ எடையுள்ளதால் வீரர்கள் எளிதாக வேலிகளை தாண்டி தூக்கி சென்று போர்களில் உபயோகப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதும் ஆலிவ் பச்சை மற்றும் பழுப்பு ஆகிய இரண்டு நிறங்களில் வெளிவரும் இந்த பைக் இந்தியாவில் பழுப்பு நிறம் ராயல் என்பில்டு நிறுவனத்தால் ராணுவத்திற்கென ஓதுக்கப்பட்டுள்ளத்தால் பொதுமக்களுக்கு ஆலிவ் பச்சை நிறம் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாசிக் 500 மாடல்களுக்கே உரித்தான டிசைனுடன், பெட்ரோல் டாங்க்கில் பெகாஸஸ் லோகோ மற்றும் தனி சீரியல் நம்பர் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
you may like this : ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 ரெட்டிட்ச் மாடல் ரூ 1,46,093 விலையில் அறிமுகம்!
