ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிட்ச் மாடல் ரூ 1,46,093 விலையில் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிட்ச் வரிசை மாடலை ரூ 1,46,093 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை பைக்குகள் இரண்டாம் உலக யுத்த காலகட்டங்களில் இங்கிலாந்தின் ரெட்டிட்ச் நகரில் தயாரிக்கப்பட்டன.

தற்போது ராயல் என்ஃபீல்டு கிளாசிக் பைக்குகள் மூன்று வண்ணங்களில் Redditch Red, Redditch Green and Redditch Blue ஆகிய மூன்று மாடல்களில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர்கள் ஜனவரி 7, 2017 பிறகு பதிவு செய்ய முடியும் என அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் 50களில் பெரும்பாலும் ராணுவப் பயன்பாட்டில் இருந்த ரெட்டிட்ச் வரிசை ராயல் என்ஃபீல்டு கிளாசிக் ரெட்டிட்ச் மோனோகிராம் 1939 ல் தயாரிக்கப்பட்ட 125சிசி திறன் கொண்ட 2 ஸ்ட்ரோக் மாடலான ‘ராயல் பேபி’ மாடலின் சாயலை ஒத்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

royal-enfield-classic-350redditch-red

இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த நேரத்தில் ராயல் என்பீல்ட் நிறுவனம் இந்த ரெட்டிட்ச் மாடலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சமயத்தில் ராணுவப்பயன்பாட்டிற்காக இந்த பைக்குகளை உபயயோகப்படுத்தும் முடிவை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

வான்வழி துருப்புக்களை ஆதரிக்க வானிலிருந்து வான்குடை பயன்படுத்தி எதிரி பிரதேசத்திற்குள் ராணுவ முகாம்களில் இக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டது யுத்த வரலாறு. ஆலிவ் பச்சை வர்ணம் கொண்ட இந்த பைக்குகள் ‘Flying Flea’ என்ற புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டன. மேலும் அப்போது உபயோகப்படுத்தப்பட்ட பெயர் மாடலும் அதே போல் கொடுக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் மாடலுக்கான ஆக்சஸரிஸ்கள் அறிமுகம்!! 

விலைப்பட்டியல் இதோ!

நகரங்கள் விலை( ஆன்ரோடு)
மும்பை 1,57,577
சென்னை 1,47,831
பெங்களூரு 1,55,456
ஹைதராபாத் 1,49,340