ஏப்ரிலியா SR150 – டெஸ்ட் ட்ரைவ் ரிப்போர்ட்!!!
இந்திய ஸ்கூட்டர் மார்க்கெட், ஆக்டிவா,ஜூபிடர் போன்ற ஜாம்பவான்கள் ஆதிக்கத்தில் உள்ள நிலையில் பியஜியோ நிறுவனம் தற்போது ஏப்ரிலியா SR150 மாடலை களத்தில் இறக்கியுள்ளது. பியஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்திய ஏப்ரிலியா ஸ்கூட்டர் பக்கவான ஸ்போர்ட்டி லுக்கை கொண்டுள்ளது. ஆனால், இந்த ஆடோமேட்டிக் ஸ்கூட்டர் சிறப்பாக செயல்படுகிறதா என்பதையும் பார்த்து விடுவோம் வாருங்கள்.
பியஜியோ நிறுவனம் எப்போதுமே செயல்திறன் மிக்க வாகனங்களை தயாரிப்பதில் முன்னோடி, அந்த வரிசையில் தற்போது ஏப்ரிலியா SR150. மேலும் இந்த மாடல் 150சிசி இன்ஜினுடன் வெளிவருகிறது என்பது குறிப்பிடதக்கது. டிசைனை பொருத்தவரை பக்கவான ஸ்போர்ட்ஸ் மாடலாக கூறலாம். முன்புற சிவப்பு மற்றும் கருப்பு வண்ண முகப்பில் ட்வின் ஹெட்லைட்டுகள் மிரட்டலான தோற்றத்தைக் கொடுக்கின்றன. அதே சிவப்பு கருப்பு வண்ண கலவையில் இருக்கையும் சிறிது உயரமான வால் பகுதியும் கொண்டுள்ளது.

32மிமீ டெலஸ்கோபிக் போர்க்குகளையும் 14 இன்ச் வீல்களையும் கொண்டுள்ளது. முழுதும் கார்பன் பைபர் பாகங்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முன்புற புட்போர்டு சிறிதாக தேவையான அளவு மட்டுமே நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பின்புற புட்ரெஸ்ட் மடக்கி வைக்கும் போது வெளியில் தெரியாமல் இருப்பது சிறப்பாக உள்ளது. ஆனால் பயணத்தின் போது புட்ரெஸ்ட் வெளியில் எடுப்பது சற்று சிரமமாக இருக்கும்.
ஏப்ரிலியா 14 இன்ச் வீல்கள் மற்றும் பிடிப்பான டயர்கள் வளைவுகளில் எதுவாக திரும்ப உதவுகிறது. செக்மண்ட்டிலேயே அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டிருப்பதால் வளைவுகளில் திரும்பும் போது ஸ்டாணட் அல்லது எக்ஸாஸ்ட் உரசிவிடும் என்ற பயம் நிச்சயம் இல்லை. கொஞ்சம் கடினமான சஸ்பென்சன் கொண்டிருப்பதால் மோசமான சாலைகளில் குதிப்பதை உணர முடிகிறது. ரைடிங் பொஷிசன் முன்னோக்கி சாய்வாக இருப்பது சற்று வசதியான அம்சம்.

பிரேக்குகளை பொருத்தவரை முன்புறம், 220 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறம் 240 மிமீ டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது. மேலும் பேக்ஜில் சைடு ஸ்டாண்ட் இல்லை. இது கட்டாய உதிரி பாகமாக கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சரியமளிக்கிறது.
ஏப்ரிலியா SR150, 65,000 ருபாய் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைப்பது போட்டியாளர்களை சமாளிக்க நிச்சயம் உதவும், ஏனெனில் இதே செக்மென்டில் வேஸ்பா 150, 88,000 ருபாய் எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனையாவதால் நிச்சயம் வாடிக்கையாளர்களை யோசிக்க வைக்கும்.
தினசரி உப்பையோகபடுத்துவர்கள், கையளுமை மற்றும் குறைவான செலவு போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டால் நிச்சியம் ஏப்ரிலியா SR150 நல்ல தேர்வக இருக்கும்.
சாதக பாதகங்கள்
ஏப்ரிலியா SR150 ஸ்கூட்டரிலும் பிரேக் லாக் கொடுக்கப்படவில்லை, அதே சமயம் ஹெட்லைட் பாஸ் ஸ்விட்ச் கொடுக்கப்பட்டுள்ளது.
செக்மன்ட்டிலேயே ஸ்மூத்தான எஞ்ஜினை கொண்டுள்ளது. பிளாஸ்டிக்குகள் இன்னும் சற்று கூடுதல் தரத்துடன் இருந்திருந்தால் சிறப்பாக இருக்கும்.
