உலக எலக்ட்ரிக் வாகன (EV) தினம்: டாப் எலக்ட்ரிக் கார் மற்றும் எலக்ட்ரிக் பைக்

உலக எலக்ட்ரிக் வாகன (ஈ.வி) தினம் செப்டம்பர் 9 ஆம் தேதி இந்த வருடத்திலிருந்து கொண்டாடப்படும், மின்சக்தியை உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வண்ணமாக இந்த தினம் கொண்டாடப்பபடுகிறது.

வாகனங்கள் வெளிப்படுத்தும் புகையால் ஏற்படும் புவி மாசுபடுதலை எலக்ட்ரிக் வாகனங்கள் குறைக்கிறது.

பல்வேறு நாடுகள் புவி மாசுபடுதலை தவிர்க்க மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்கான சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளில் மின்சார வாகனங்களைச் சேர்த்து வருகிறது. குறிப்பாக 2020-ம் ஆண்டு மின்சார வாகனங்கள் அதிகம் தயாரிக்கப்பட்டு விற்பனையாகியுள்ளன.

எலக்ட்ரிக் வாகனங்களில் சிறந்த வாகனங்கள் ஒரு சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம்.

சிறந்த எலக்ட்ரிக் கார்கள்:

1.மெர்சிடிஸ் பென்ஸ் EQC

இந்த காரில் உள்ள இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்கள் 402 பி.ஹச்.பி பவரையும், 760 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது, இந்த காரில் உள்ள சிறந்த 80 கி.வாட் லித்தியம்-அயன் பேட்டரி அமைப்பால் இந்த கார் ஒரு முழு சார்ஜில் 445-471 கி.மீ தூரம் பயணிக்கும். மேலும் இந்த கார் 8 வருட வாரன்டியுடன் வருகிறது.

எலக்ட்ரிக் அம்பாசிடர் அறிமுகம்! புதிய அவதாரம் அம்பி 2.0!

2.ஆடி இ-ட்ரான்

இந்த காரில் உள்ள இரட்டை எலக்ட்ரிக் மோட்டார்கள் 355-408 பி.ஹச்.பி பவரையும், 561 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது, இந்த காரில் உள்ள 95 கி.வாட் பேட்டரி அமைப்பால் இந்த கார் ஒரு முழு சார்ஜில் 400 கி.மீ தூரம் பயணிக்கும். இந்த காரை சார்ஜ் செய்ய வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.

3. டெஸ்லா மாடல் எஸ்

இந்த காரில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார்கள் 534 ஹச்.பி பவரையும், 755 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது, இந்த காரில் உள்ள சிறந்த 100 கி.வாட்/மணி லித்தியம்-அயன் பேட்டரி அமைப்பால் இந்த கார் ஒரு முழு சார்ஜில் 402 கி.மீ தூரம் பயணிக்கும். மேலும் இந்த கார் 4-12 வருட வாரன்டியுடன் வருகிறது.

விற்பனையை தொடங்கி ஒரே ஆண்டில் 1 லட்சம் செல்டோஸ் கார்களை விற்ற கியா நிறுவனம்

சிறந்த எலக்ட்ரிக் பைக்குகள்:

1.ரிவோல்ட் ஆர்.வி 400

இந்த பைக்கில் உள்ள 3 கி.வாட் எலக்ட்ரிக் மோட்டர் 170 என்.எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டது, இந்த காரில் உள்ள 3.24 கி.வாட் லித்தியம்-அயன் பேட்டரி அமைப்பால் இந்த பைக் ஒரு முழு சார்ஜில் ஏ.ஆர்.ஏ.ஐ சான்றுப்படி 156 கி.மீ தூரம் பயணிக்கும். மேலும் இந்த பைக் 8 வருட வாரன்டியுடன் வருகிறது.

2.ஒகினாவா ஃபிரைஸ் ப்ரோ

இந்த பைக்கில் உள்ள 1 கி.வாட் பிரஸ்லெஸ் டிசி (BLDC) மோட்டர் 2.5 கி.வாட் பவரையும், 40 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது, இந்த காரில் உள்ள 2 கி.வாட் லித்தியம்-அயன் பேட்டரி அமைப்பால் இந்த பைக் ஒரு முழு சார்ஜில் ஏ.ஆர்.ஏ.ஐ சான்றுப்படி ஸ்போர்ட்ஸ் மோடில் 88 கி.மீ தூரமும், எக்கானமி மோடில் 110 கி.மீ தூரமும் பயணிக்கும்.