வோக்ஸ்வாகன் பஸாட் கார் திரும்ப விற்பனைக்கு வருகிறதா?

வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் முதன்மையான செடான் வகை காரான பஸாட் காரை திரும்ப புதிய வடிவமைப்பில் விற்பனை செய்யப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வோக்ஸ்வாகன் பஸாட் 2020 ஆண்டின் கடைசியில் அல்லது 2021 ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2010-ம் ஆண்டு 1.8 லி பெட்ரோல் என்ஜின் கொண்டு இந்த கார் தயாரிக்கப்பட்டது, 2010-ல் 1.8 லி டீசல் என்ஜினுக்கு மாறியது. இப்போது 2020-ல் இந்த கார் பி.எஸ் 6 விதிகளின்படி மாற்றியமைக்கப்பட்ட 2.0 லி 190hp TSI பெட்ரோல் என்ஜின் கொண்டு தயாரிக்கப்படும் என செய்திகள் வெளிவந்துள்ளன.

புதிய வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்கள்:

இந்த காரின் தோற்றத்தை சற்று மேம்படுத்தியுள்ளனர், புதிய முன்பகுதி மற்றும் பின்பகுதி பம்பர், ஒன்றுசேர்க்கப்பட்ட கிரில் மற்றும் முகப்பு விளக்குகள் இவை இந்த காருக்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கின்றன.

புதிய டிராவல் அசிஸ்ட், சிம் கார்டு இணைப்பு, ஆப்பிள் கார் பிளே, டச் ஸ்கீரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் இன்னும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளன.

விலை:

இந்த கார் சுமார் ரூ.34-35 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.