டொயோட்டோ எட்டியோஸ் மற்றும் எட்டியோஸ் லிவா ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அறிமுகம்!!!

டொயோட்டோ கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், தனது எட்டியோஸ் மாடல்களின் ஃபேஸ்லிஃப்ட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக அனைத்து ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுமே தோற்றம் மற்றும் பாடி கிராபிக்ஸ் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் நிலையில் எட்டியோஸ் மற்றும் லிவா கூடுதல் வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் பிளேட்டினம் வகையில் விற்பனைக்கு வருகின்றன. லிவா 5.24 லட்சம்(எக்ஸ் ஷோரூம், மும்பை) விலையிலும் எட்டியோஸ் 6.43 லட்சம் (எக்ஸ் ஷோரூம்,மும்பை ) விற்பனைக்கு வருகிறது.வெளிப்புற தோற்றத்தை பொருத்தவரை, முன்புறம் முற்றிலுமாக மாற்றம் பெற்றுள்ளது. இரு புறங்களிலும் ஏர் டேம்கள் பனிவிளக்குகளோடு புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. வி வடிவிலான குரோம் க்ரில்கள் ப்ரீமீயம் லுக்கை கொடுக்கின்றன. பின்புறம் டெயில் விளக்குகள் சிறிது மாற்றமடைந்து உள்ளன. புதிய அலாய் வீல்கள் மற்றும் எலெக்ட்ரானிக் சைடு மிரர் போன்றவை கூடுதல் தொகைக்கு அர்த்தமுள்ளதாக இருக்கும்.

toyota-etios-liva-facelift

உட்புறம் இன்ஸ்ட்ரூமன்ட் கன்சோல், புதிய டிசைன்களினாலான சீட் கவர்கள், மற்றும் பின்புற இருக்கையில் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்டுகள் போன்றவை இடம் பெறுகின்றன. மிக முக்கியமாக பாதுகாப்பு அம்சங்களை கூறலாம். தற்போது இரு மாடல்களிலும் ஏர்பேக் நிரந்தர அம்சமாக இடம்பெற்றுள்ளது. மேலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

என்ஜின் மற்றும் இதர தொழில்நுட்ப வசதிகளை பொருத்தவரை எந்த மாற்றமுமில்லை. எட்டியோஸ், பெட்ரோல் வேரியண்ட் அதே 1.5 லிட்டர் என்ஜின் 90பிஎஸ் பவரையும் 132என்எம் உட்சபட்ச டார்க்கையும், லிவா 1.2 லிட்டர் என்ஜின் 80 பிஎஸ் பவரையும் 104 என்எம் டார்க்கையும் அளிக்கிறது.

toyota-etios-liva-facelift-rear-yenthiran

டீசல் வேரியண்ட்டுகள் 1.4 லிட்டர் என்ஜின் 68பிஎஸ் 107 என்எம் டார்க்கையும் அளிக்கவல்லது. தற்போது அதிர்வுகளை தாங்கும் பொருட்டு என்ஜின் மௌன்ட்டுகள் ரப்பர்களுக்கு பதிலாக ஹைட்ராலிக்கால் உருவாக்கபட்டு சஸ்பென்சர்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இப்புதிய ஃபேஸ்லிஃப்ட் எட்டியோஸ் செடான் செக்மன்டில் நிஸான் சன்னி மற்றும் ரெனோ ஸ்காலா ஆகியவற்றுடன் நேரடியாக மோதும். மறுபக்கம் லிவா, மாருதி ஸ்விப்ட், கிரேண்ட் ஐ10 மற்றும் நிஸான் மைக்ரா ஆகிய போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்