5,000 பேருந்துகளுக்கான முன்பதிவுகளை அள்ளிய டாடா மோட்டார்ஸ்!

உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டோர்ஸ், பல்வேறு மாநிலங்களில் இருந்து பெற்ற முன்பதிவுகள் மூலம் கடந்த ஆண்டை விட 80% வளர்ச்சியை அடைந்துள்ளது.

செப்டம்பர் 6 ம் தேதி டாடா நிறுவனம் அளித்துள்ள தகவலின் படி, இந்தியாவின் பெரும்பாலன மாநிலங்களின் நகர மற்றும் மாநில பேருந்து கழகங்களில் இருந்து கிட்டதட்ட 5,000 முன்பதிவுகளை பெற்றுள்ளதாகவும் கடந்த சில வருடங்களுக்கு பிறகு இவளவு பெரிய முன்பதிவு எண்ணிக்கையை பெறுவது இதுவே முதல்முறை மேலும் இந்த வளர்ச்சியானது அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலமவே சாத்தியமாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அனைத்து போக்குவரத்து கழகங்களும் புதிய தொழில்நுட்பம், பாதுகாப்பு, மற்றும் சொகுசான பயண அனுபவம் போன்ற வசதிகளை கருத்தில் கொண்டே புதிய ஆர்டர்களை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட அனைத்து வசதிகளுமே பயணிகளின் விருப்பங்களையும் அவர்களின் தினசரி தேவைகளை சிறப்பாக நிறைவேற்ற உதவும் வகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறிப்பாக அதிநவீன பாதுகாப்பு வசதிகளான ஜிபிஎஸ், தனியாங்கி டிக்கெட் இயந்திரம், சிசிடிவி கேமராக்காள், வைஃபை மற்றும் எலெக்ட்ரானிக் தகவல்கள் போன்றவற்றை அதிகம் விரும்புவதாகவும் மற்றும் சில பேருந்துகளில் சொகுசான பயனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஏர்கண்டிசன், தாள்தாள கதவுகள், அதிர்வுகள் மற்றும் சப்தம் குறைவாக உள்ள இருக்கைகள் மற்றும் ஏர்ச ஸ்பென்சன் போன்றவை பிரதான அம்சமாக இருக்குமாறு விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது

இதன் வாடிக்கையாளர்கள் பட்டியலில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களும் அடங்கும். மேலும் தற்போது கார்கள் உட்பட அனைத்து வாகனங்களும் ஹைப்ரிட் மற்றும் முழு எலெக்ட்ரிக் வசதியுடன் தயாரிக்கப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பொதுப்போக்குவரத்து வாகனங்களை மேம்படுத்துவது மாசுகட்டுபாடு மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியமாகிறது.

டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே ஹைப்ரிட் தொழில்நுட்பத்தில் இயங்கும் பேருந்துகளை தயாரித்து வருகிறது. விரைவில் இந்திய சாலைகளில் பசுமை வாகனங்கள் பயணிக்க துவங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.