2016 INTERMOT – புதிய சுசூகி V-Strom 1000 அறிமுகம்

தற்போது ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும் ஷோவில் சுஸூகி தனது V-Strom 1000 மற்றும் V-Strom 1000 XT ஆகிய இரு மாடல்களுக்கும் புதிய ஏடிசன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்புதிய எடிசன்களில் கூர்மையான வரிகள் முன்புறம் மூக்கு பகுதியிலிருந்து பெட்ரோல் டாங்க் வரை நீடிக்கப்பட்டுள்ளன. அதே போல் முகப்பு விண்ட் ஸ்க்ரீனும் சப்தத்தை குறைக்கும் பொருட்டு ரீடிசைன் செய்யப்பட்டு உயரம் 49மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விண்ட் ஸ்க்ரீனை மேல் கீழாகவோ அல்லது பக்கவாட்டிலோ கைகளாலேயே அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.

suzuki-v-strom-2017-yenthiran

என்ஜின் மற்றும் பவரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே சமயம் கவாஸகி நின்ஜா H2 போன்றே யுரோ 4 மாசுக்கட்டுப்பாட்டு விதிகளின் படி மேம்படுத்தப்பட்டுள்ளது. இரு மாடலுமே 1037 சிசி திறனுடன் 101 பிஎஸ் பவரையும் 103 என்எம் டார்க்கையும் அளிக்கவல்ல 6 ஸ்பீட் கியர்‌பாக்ஸ் ட்ரான்ஸ்மிஸன் கொண்ட ட்வின் மோட்டார் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பிடத்தக்க வசதியாக ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டத்தை கூறலாம். இதுவும் கவாஸகி நின்ஜா H2 வை போல் போஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 5-axis IMU சென்சார்கள் அதிவேகத்தில் எளிதாக கட்டுப்படுத்தவும், பைக்கின் வேகம், நிலைத்தன்மை மற்றும் சாய்வு கோணம் ஆகியவற்றை பொறுத்து பிரேக்குகளுக்கு சீரான அழுத்தத்தை வழங்கும் திறன் கொண்டவை. மேலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் முன்புற பிரேக் அழுத்தப்படும் போது இந்த சென்சார்கள் தானியங்கி முறையில் பின்புற பிரேக்குகளிலும் அழுத்தத்தை பரவ செய்து நிலைத்தன்மையை உறுதி செய்து கொள்ளும் திறன் படைத்தவை.

suzuki-v-strom-2017-white-intermot-yenthiran

சுஸூகி நிறுவனம் வீ ஸ்ட்ரோம் 1000 மற்றும் வீ ஸ்ட்ரோம் 1000 எக்ஸ்டி இரண்டிற்கும் விலையை இன்னும் அறிவிக்காத நிலையில் இவை 2017 மார்ச் மாதம் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரும் எனவும் சர்வதேச அறிமுகத்திற்கு பின்னரே இந்தியாவில் விற்பனைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

You may also like this: 2016 INTERMOT – இதோ 2017 கவாஸகி நின்ஜா H2!