சுஸுகி கிக்ஸர் 250 விரைவில்!!
புதிய சுஸுகி GSX R250 ஆக்டோபரில் நடக்கவுள்ள INTERMOT ஷோ அல்லது நவம்பர் மாத EIMCA மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 250சிசி இன்ஜின் கொண்ட சுஸுகி கிக்ஸர் GSX R250 ன் பேட்டண்ட் படங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி இருந்ததை செய்தி வெளியிட்டு இருந்தோம்.
You may also like this : சுஸுகி GSX R250 பேட்டன்ட் படங்கள்
கிக்ஸர் சர்வதேச அளவில் இந்த மாடல் GSX R250 பெயரிலும், இந்தியாவில் சுஸுகி கிக்ஸர் 250 என்ற பெயரிலும் வெளியாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
GSX R1000 குடும்பத்தை சேர்ந்த இந்த மாடலின் டேங்க் மற்றும் டெயில் பகுதிகள் மிடுக்கான ஸ்போர்ட்டி லுக்கை தருகின்றன. இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகள் விற்பனை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டுதான் சுஸுகி நிறுவனம் தொடர்ந்து புது மாடல்களை களமிறக்கி வருகிறது.

இஞ்சினை பொறுத்தவரை ஏராளமான செய்திகள் உலா வருகின்றன. லிக்விட் கூல்டு பேரலல் ட்வின் மோட்டர் அல்லது புதிய சிங்கள் சிலிண்டர் என்ஜினாகவோ இருக்கலாம். GSX R250 ன் ஏரோ டைனமிக் நிச்சியமாக சிறந்த நெடுஞ்சாலை மற்றும் நீண்ட பயணங்களுக்கும் ஏற்றதாக இருக்கும் என நம்பலாம்.
சுஸுகி கிக்ஸர் சிங்கள் சிலிண்டர் என்ஜினாக இருக்கும் பட்சத்தில் குறைந்த விலையில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. மேலும் இந்த எஞ்சின் 25-28 பிஎஸ் பவரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். வெகு விரைவில் மற்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் நிலையில் இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு மத்தியில் எதிர்பார்க்கலாம்.
You may also like this : சுஸுகி கிக்ஸர் SP மற்றும் SF வேரியன்ட்டுகள் இந்தியாவில் அறிமுகம்
