ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் மாடலுக்கான ஆக்சஸரிஸ்கள் அறிமுகம்!! 

ராயல் என்ஃபீல்டு தனது தண்டர்பேர்டு எக்ஸ் (Thunderbird X) 350 மற்றும் 500 மாடலுக்கான ஆக்சஸரிஸ்களை அறிமுகம் செய்துள்ளது.

பெரும்பாலான நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் ஷோரூமை விட்டு வெளியே வரும் போதே தொடர்பை துண்டித்து கொள்கின்றன. ஆனால் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம் சிறிது வித்தியாசமாக தனது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு மாடல்களுக்கு புதிய ஒரிஜினல் ஆக்சஸரிஸ்களை அறிமுகம் செய்துள்ளது.

You may also like : ராயல் என்ஃபீல்டுக்கான சிறந்த ஆக்சஸரீஸ்கள் இதோ!

800 ரூபாய் முதல் 9500 வரையிலான விலையில் அலுமினியம் அலாய் வீல்கள், மிருதுவான பைகள், ஆயில் ஃபில்லர் மூடிகள், பைக் கவர்கள், ப்ரண்ட் ஸ்க்ரீன், பில்லியன் பேக் ரெஸ்ட் மற்றும் என்ஜின் கவர் போன்றவை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ராயல் என்ஃபீல்டு தண்டார்பேர்டு மாடல்கள் இயல்பாகவே சிறப்பான தோற்றத்தை பெற்றிருந்தாலும், இந்த ஆக்சஸரிஸ்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பம் போல மாற்றிக்கொள்ளலாம். மேற்படி முழு பட்டியல் மற்றும் விலை விபரங்கள் கொண்ட தகவல்கள் ராயல் என்ஃபீல்டு இணையதளத்தில் காணலாம். இன்னும் ஓரிரு வாரங்களில் அனைத்து டீலர்ஷிப்களிலும் கிடைக்கும் என தெரிகிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350, விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்