வாடகை ஹெலிக்காப்டர் சேவை கோவையில் அறிமுகம்

கோவையை சேர்ந்த பிளானட் எக்ஸ் மற்றும் எக்ஸ்-பிரஸ் ஹாலிடேஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து அவசர தேவை மற்றும் சுற்றுலா போன்றவற்றிக்கு வாடகை ஹெலிக்காப்டர் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

தனி நபர்களின் தொழில் சம்பந்தப்பட்ட பயணங்கள், திருமணம், பிறந்த நாள் மற்றும் மற்ற விழாக்கள், நகர சுற்றுப்பயணம், மருத்துவ அவசர தேவைகளுக்கும் ஹெலிக்காப்டரை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

முதற்கட்டமாக அரைமணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை பொதுமக்கள் கோவையில் நகர சுற்றுப்பயணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.

தனிப்பட்ட அவசர பயணங்களுக்கும், மருத்துவ அவசர சேவைக்கும் இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் அவசரமான மருத்துவ தேவைகளுக்கு இது போன்ற வான் வழி சேவைகள் ஒவ்வொரு முக்கிய நகரங்களிலும் இருக்க வேண்டும் என்பது பலரின் கருத்து.

வெளிநாடுகளில் தனிப்பட்ட பயணங்களுக்கு ஜெட் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அந்த வரிசையில் தமிழ்நாட்டில் இந்த ஹெலிக்காப்டர் சேவையானது வரவேற்கத்தக்கது எனவும் எனினும் பாதுகாப்பு அம்சங்களை இன்னும் வலுப்படுத்த வேண்டும் எனவும் பலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

கோவையில் உள்ள கங்கா ஹெலிபேட் சர்வீஸ் மையத்திலிருந்து இந்த சேவை இயக்கப்படும் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.