புதிய எலெக்ட்ரிக் க்விட் K-ZE மாடலை களமிறக்கும் ரெனோ!!
நாளை மறுநாள் நடைபெறவுள்ள 2018 பாரீஸ் மோட்டோர் ஷோவில் ரெனோ நிறுவனம், க்விட் மாடலின் எலெக்ட்ரிக் வெர்சனான K-ZE கான்செப்ட் மாடலை காட்சிபடுத்தவுள்ளது. உலகம் முழுவதும் இந்த மாடலை களமிறக்க திட்டமிட்டுள்ள ரெனோ, 2019 ஆம் ஆண்டில் சீனாவில் விற்பனையை துவக்க ஆலோசித்து வருகிறது. இந்த பட்டியலில் இந்தியாவும் அடக்கம்.
நூறு சதவீத எலெக்ட்ரிக் காராக வரும் இம்மாடல் பற்றிய முழு விவரம் வெளியாகாத நிலையில் ,பொது சார்ஜீங் பாயிண்ட்களையும் உபயோகப்படுத்தும் வகையில் ட்யுவல் சார்ஜிங்க் முறையில் வடிவமைகப்பட்டுள்ளது. முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 250 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யமுடியும்.

க்விட்டின் மேம்படுத்தபட்ட டிசைனுடன், திருத்தப்பட்ட பெரிய கிரில்களுடன் ரெனோ லோகோவும் சற்று பெரிதாக்கபட்டுள்ளது. பனி விளக்குகளும் முன்பை விட கம்பீர தோற்றத்தை கொடுக்கின்றன. மேம்படுத்தப்பட்ட சென்ட்ரல் கன்சோல், தொடு திரை, ரிவர்ஸ் கேமரா மற்றும் ரிவர்ஸ் பார்கிங் சென்சார் போன்றவை குறிப்பிடத்தக்க அம்சங்கள்.
சீனாவில் ரெனோ மற்றும் நிஸான் மோட்டார் க்ரூப்பின் கூட்டு நிறுவனமான e-GT எனர்ஜி ஆட்டோமோடிவ் கோ நிறுவனம் இந்த இ-க்விட் மாடலை தயாரிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை, எலெக்ட்ரிக் வாகனங்களை தடையின்றி இயக்கத் தேவையான கட்டமைப்பு மற்றும் செலவுகள் ஆகியவை மிகப்பெரிய தடையாக உள்ள நிலையில், இங்கு அறிமுகப்படுத்த குறிப்பிட்ட காலம் பிடிக்கலாம்.
மேலும் தற்போது, தயாரிப்பு செலவுகளை ஒப்பீடும் போது பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை விட 60 சதவீதம் கூடுதல் என்பதும், எலக்ட்டிரிக் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி உள்ளிட்ட பாகங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் கட்டமைப்பு போன்றவற்றிற்கு பிற நாடுகளை சார்ந்து இருப்பதாலும் இந்தியாவில் எலக்ட்டிரிக் கார்களை தயாரிக்க நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.
