புதிய பவர் ஃபுல் ரெனால்ட் டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அறிமுகம்
ரெனால்ட் நிறுவனம் புதிய டஸ்ட்டர் டர்போ பெட்ரோல் மாடல் காரை ரூ. 8.6-13.6 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது, இது மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட 3 வேரியன்டுகள் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட 2 வேரியன்டுகள் என 5 வேரியன்டுகளில் கிடைக்கிறது.
இதன் புதிய 1330 சி.சி 1.3 லி, 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் 156 பி.எஸ் பவரையும், 254 நி/மீ டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த இன்ஜினின் புதிய தொழில்நுட்பமான வி.வி.டி (Dual Variable Valve Timing) டர்போ சார்ஜருடன் இணைக்கப்பட்டுள்ள ஜி.டி.ஐ (GDI – Gasoline Direct Injection) சிஸ்டத்தின் மூலம் எரிபொருளை குறைவாக உபயோக்கித்து, புகை வெளியேற்றத்தைக் குறைக்கிறது.
டஸ்ட்டர் டர்போ இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது சி.வி.டி டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
டஸ்ட்டர் டர்போ 14-16.5 கி.மீ/லி மைலேஜ் தரும். இந்த காரை ரூ.5000 டோக்கன் சார்ஜ் கட்டி புக்கிங் செய்து கொள்ளலாம்.
புக்கிங்: https://www.renault.co.in/book-your-renault.html
வேரியன்ட் விலை
RXE – ரூ. 8.6 லட்சம்
RXS – ரூ. 9.4 லட்சம்
RXZ – ரூ. 10 லட்சம்
RXS CVT ஆட்டோமேட்டிக் – ரூ. 13 லட்சம்
RXZ CVT ஆட்டோமேட்டிக் – ரூ. 13.6 லட்சம்


