வெச்ச குறி தப்பாது! அல்லு தெறிக்க விடும் ரஃபேல் போர் விமானங்கள்
போர் விமானங்களை தயாரிக்கும் பிரென்ச் நிறுவனமான டஸ்ஸால்ட் ஏவியேஷன் ரஃபேல் ரக போர் விமானங்களை தயாரிக்கிறது. 2011 ஆம் ஆண்டு இந்த ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை பரிந்துரை செய்தது. 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் ரூ. 787 கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்த ரஃபேல் ரக போர் விமானங்கள் இரட்டை இன்ஜின், கனார்ட் டெல்டா இறக்கைகள் கொண்ட பல்வேறு செயல்திறன் கொண்ட போர் விமானமாகும். ரஃபேல் என்ற வார்த்தையின் அர்த்தம் “பலமான காற்று”, “வெடித்துப் பரவும் நெருப்பு” என்பதாகும்.
இந்த போர் விமானம் மேம்படுத்தப்பட்ட இரட்டை Snecma M88-4E இன்ஜினை கொண்டது, இது 95 கிலோ நியூட்டன் அளவிற்கு உந்துதல் சக்தியை தரும், எரிபொருள் எரிந்து மேலே சென்ற பின் 105 கிலோ நியூட்டன் அளவிற்கு உந்துதல் சக்தியை தரக்கூடியது. மேலும் காற்றை மாசுபடுத்தாத வகையில் எரிபொருளை எரிக்கும் பகுதி, ஒற்றை கிரிஸ்டல் டர்பைன் பிளேடுகள், ரேடார் மற்றும் இன்பராரெட் ஆகியவற்றை குறைப்பதற்கான தொழில்நுட்பம் ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டது.
இந்த விமானம் அதிக உயரத்தில் மணிக்கு 2223 கி.மீ தூரமும், குறைந்த தாழ்வான இடத்தில் மணிக்கு 1390 கி.மீ தூரமும் பயணிக்கும். இந்த விமானம் போருக்கு தயாராக 3 வினாடிகளே போதுமானது.
இதன் ரேடார் கருவிகள் வான் வழியாக, கடல் வழியாக, தரை வழியாக வரும் ஏவுகணைகளை நீண்ட தூரத்திலிருந்தே காட்டிவிடும். இந்த விமானத்தில் 9500 கிலோ குண்டுகள் மற்றும் ஆயுதங்களை எடுத்து செல்ல முடியும், எதிரி நாட்டு ஏவுகணைகளை வானிலே எதிர்த்து மோதி அழிக்கும் ஏவுகணைகளைக் கொண்டது, ஒரு நிமிடத்திற்கு 2500 சுற்றுகள் சுடும் சக்தி கொண்ட பீரங்கிகளை கொண்டது. மொத்தமாக 24,500 கிலோ எடையை இந்த விமானத்தில் ஏற்றி செல்லலாம்.
இந்த விமானம் 4400 – 4700 கிலோ அளவிற்கு எரிபொருள் நிரப்பும் வசதி கொண்டது. ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 3500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வல்லது. அதிகபட்சமாக மணிக்கு 1912 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் வல்லமை கொண்டது.
அதே சமயம்சீனாவின் 20 மணிக்கு 2100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரபேல் ஜெட் வண்டியை விட இரு மடங்கு எடையைச் சுமக்க வல்லது. இந்த போர் விமானம் பாகிஸ்தானின் புதிய F-16s ரக போர் விமானங்களை விட அதிக சக்தி வாய்ந்தது.
டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் 36 போர் விமானங்களை தயாரித்து, தற்போது இந்தியாவிற்கு அனுப்பி வைக்க தொடங்கியுள்ளது. இதன் முதல்கட்டமாக 27.7.20 அன்று 5 போர் விமானங்களை அனுப்பி வைத்தது.



