பிஎஸ் 6 நிசான் கிக்ஸ் அறிமுகம், மே 15 முதல் புக்கிங் ஆரம்பம்!

பிஎஸ் 6 விதிகளின்படி மேம்படுத்தப்பட்ட நிசான் கிக்ஸ் கார் இந்திய சந்தையில் மார்ச் மாதம் விற்பனையை தொடங்க ஆயத்தமாய் இருந்த நிலையில், கரோனா வைரஸ் பரவலின் காரணமாக இதன் விற்பனை மே 15 முதல் புக்கிங் ஆரம்பம் ஆகும் என அறிவிக்கபட்டுள்ளது.

1.3 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 156bhp பவரையும் 254Nm டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த என்ஜின் மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் தேர்வுகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆராய் சான்றுபடி 16.3 கிமீ மைலேஜ் கொடுக்கும் இந்த என்ஜின் மூலம் போட்டியாளர்களான கிரேட்டா(115bhp/140Nm), செல்டோஸ்(115bhp/140Nm) கார்களை விட பவர்புல் காராக மாறியுள்ளது.

1.5 லிட்டர் திறன் கொண்ட 4 சிலிண்டர் மேனுவல் கியர்பாக்ஸ் என்ஜின், 106bhp பவரையும் 142Nm  டார்க்கையும் வழங்குகிறது. ஆராய் சான்றுபடி 14.1 கிமீ மைலேஜ் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

என்ஜின் XL XV XV Premium XV Premium(O)
1.5-லிட்டர் பெட்ரோல் மேனுவல்
1.3-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மேனுவல்
1.3-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் ஆட்டோமேட்டிக்

சிறப்பம்சங்கள்:
கிலெஸ் எண்ட்ரி, என்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி,எல்இடி முகப்பு விளக்குகள், பகல்நேர ரன்னிங் விளக்குகள், பின்புற பணி விளக்குகள், 360 டிகிரி மானிடர் கேமரா, லெதர் இருக்கைகள், ஏர்பேக்குகள் என ஏராளமான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

விலை:
9.7 – 10 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் இம்மாதம் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.