புதிய மாருதி ஸிவிஃப்ட் வாங்க யோசிப்பவர்கள் இதையும் கொஞ்சம் பாத்துட்டு போங்க!!!
தற்போது விற்பனையில் உள்ள புதிய 2017 மாருதி ஸ்விஃப்ட், யுரோ என்கேப் தரச்சோதனையில் 3 ஸ்டார்களை மட்டுமே பெற்றுள்ளது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 83%, குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 75% பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த சோதனையில் தேறியிருந்தாலும் சோதனை செய்யப்பட்ட மாடல் ஐரோப்பிய விதிமுறைகளுக்குட்பட்டு தயாரிக்கப்பட்டவை என்பதும், இந்தியாவில் அந்த அளவிற்கு கடுமையான விதிமுறைகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தியாவில் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் மற்றும் இபிடீ போன்ற பாதுகாப்பு அம்சங்கள் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பே மத்திய அரசு புதிய போக்குவரத்து வாகனங்ககளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பரிந்துரை செய்து 2018, 19 ஆம் ஆண்டு வாக்கில் நடைமுறைக்கு கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்தில் விபத்தில் சிக்கும் போது மாருதி கார்கள் அதிக சேதம் அடைவதற்கு பாதுகாப்பு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததே காரணம். எனவே புதிய கார் வாங்கும் யோசனையில் இருப்பவர்கள் விலை சற்று கூட இருந்தாலும் பாதுகாப்பையும் மனதில் வைத்து கொள்வது நல்லது.
