மஹிந்திரா இ2ஓ ப்ளஸ் அக்டோபர் 21ல் அறிமுகம்!!
மஹிந்திரா நிறுவனம் முழுவதும் எலெக்ட்ரிக் வசதியுடன், நான்கு கதவுகள், ரேன்ஜ் அதிகரிக்கப்பட்ட மற்றும் வெகு விரைவில் முழுவதும் சார்ஜ் ஆகும் திறன் கொண்ட புதிய இ2ஓ ப்ளஸ் மாடலை நாளை அறிமுகம் செய்யவுள்ளது.
ஏற்கனவே மஹிந்திரா ஏலெக்ட்ரிக் பல டீஸர்களை வெளியிட்டுள்ள நிலையில் தற்போது விற்பனையில் உள்ள இ2ஓ மாடல் நான்கு கதவுகள் கொண்டதாக புதிய வசதிகளுடன் அறிமுகமாகிறது.
இந்தியாவில் ஏற்கனவே ரேவா ஏலெக்ட்ரிக் மாடலை விற்பனை செய்து வந்த மஹிந்திரா நிறுவனம் எலெக்ட்டிரிக் வாகனத் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கிகுகிறது. இந்த புதிய இ2ஓ மாடலை அடுத்த தலைமுறை மாடலாக வெளியிட உள்ளது. அதே சமயம் தொழில்நுட்ப விவரங்கள் ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில் நாளை அறிமுக விழாவில் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

இளைய தலைமுறையினரை கவரும் வகையில் ஸ்போர்டீயான வெளிப்புற தோற்றம் மற்றும் நவீன வசதிகள் கொண்ட இன்டீரியர் கொண்டிருக்கும் என தெரிகிறது. ஏற்கனவே கிடைத்த தகவலின் படி என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாமல் தற்போதைய மாடலில் உள்ள 25.8 பிஎஸ் பவர் மற்றும் 53.9 என்எம் உட்சபட்ச டார்க்கை வழங்கும் திறன் கொண்ட அதே என்ஜின் உபயோகப்படுத்தப்படலாம் என எதிர்பார்ககப்படுகிறது.
