இந்த வருடத்தின் அடேங்கப்பா கார் லம்போர்கினி ஹூராகன் ஏவியோ அறிமுகம்!
லம்போர்கினி நிறுவனம் ஸ்பெசல் ஏடிசன் காராக ஹூராகன் சூப்பர் காரை ஏவியோ ரூ 3.71கோடி ( எக்ஸ் – ஷோரூம் ) விலையில் அறிமுகப் படுத்தி உள்ளது. இந்த ஸ்பெசல் எடிசன் மாடல் சில மாதங்களுக்கு முன்பு பீஜிங் மோட்டார் ஷோவில் அறிமுகப்படுதப்பட்டது. மேலும் அப்போதே இந்த கார் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
வெறும் 250 கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் இந்த கார் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வண்ணங்கள் மற்றும் வசதிகள் கஸ்டமைஸ் செய்து தரப்படும் என அறிவித்துள்ளது.

இந்த சூப்பர் கார் LP 610-4 வகை கூப் மாடலாக வரப்போகிறது. 5.2 லிட்டர் என்ஜின் திறன் கொண்ட என்ஜின் 610பிஸ் பவரையும் 560 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் வல்லமை கொண்டது மேலும் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ட்ரான்மிஷன் நிச்சயம் தெறிக்கவிடும். எல்லாவற்றையும் விட முக்கியமான செய்தி இந்த கார் ௦-100 கிமீ வேகத்தை வெறும் 3.2 வினாடியிலும் ௦-200கிமீ வேகத்தை 9.9 வினாடியிலும் எட்டிவிடும் வல்லமை பெற்றது.
லம்போர்கினி ஹூராகன் ஏவியோ ஐந்து வண்ணங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வண்ணங்களின் பெயர்கள் வேதியல் சமன்பாட்டை போல் மிக நீளமாக இருப்பதால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளோம் ( Pearlescert finesh Grigio Falco, Mattle Shades of Blue Grifo, Grigio NIbbio, Girigo Vulcano and Verde Turbine) ஆகிய நிறங்களில் கிடைக்கிறது. லம்போர்கினியின் வயதை குறிக்கும் பொருட்டு கதவில் L63 என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்டு உள்ளது.
முழுவதும் கருப்பு வண்ண இன்டிரியர், மிக சொகுசான அல்கேன்டரா அப்போல்ஸ்தரியில் வெள்ளை தையல்களுடன் கண்ணை பறிக்கிறது. இருக்கைகளிலும் லேசரில் அச்சடிக்கப்பட்ட L63 பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த விலைக்கு பேரென்ன காருக்குள் ஊரையே வைக்கலாம்!
