வெறும் 6 லட்சம் விலையில் புதிய கியா சொனெட் SUV

2020 இந்தியாவில் உள்ள நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கியா சொனெட் SUV கார் காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த கார் அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே விற்பனை செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இந்த கார் தனது போட்டியாளர்களான ஹுண்டாய் வென்யூ, மாருதி சுசூகி விட்டாரா பிரிஸ்ஸா, டாடா  நெக்ஸான் ஆகிய கார்களை விட அதிக அம்சங்கள் கொண்டது.

இந்த கார் 3 என்ஜின் தேர்வுகளுடன் வருகிறது

i)1.2 லி நேச்சுரலி ஏஸ்பயர்டு பெட்ரோல் என்ஜின்
ii)1.0 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின்
iii)1.5 லி டீசல் மோட்டார் என்ஜின்

1.2 லி நேச்சுரலி ஏஸ்பயர்டு பெட்ரோல் என்ஜின் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும், இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

1.0 லி டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 119 பிஎச்பி  பவரையும், 172  என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், இன்டலிஜென்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் (iMT), இரட்டை-கிளச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இவை மூன்றில் ஏதாவது ஒரு தேர்வுடன் கிடைக்கும்.

1.5 லி டீசல் மோட்டார் என்ஜின் 99 பிஎச்பி  பவரையும், 240 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும், இதற்கு 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கொண்ட மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

சிறப்பம்சங்கள்:

மிகவும் அகலமான புதிய தலைமுறைக்கான UVO இணைப்பு கொண்ட டச் ஸ்கிரீன் இன்போடைன்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் கன்ட்ரோல் – ”ஹலோ கியா” என்று சொன்னால் நமக்கு உதவும் வாய்ஸ் அசிஸ்ட்டன்ட், ஆட்டோமேட்டிக் ஏ.சி, சுற்றுப்புற விளக்குகள், பவர் டிரைவர் சீட், எலக்ட்ரானிக் சன் ஃரூப், ஸ்வப்ட்-பேக் முகப்பு விளக்குகள், பகல் நேர ரன்னிங் எல்.இ.டி. விளக்குகள், வலுவான பம்பர், ரிட்ஜ் கொண்ட கிளாம்ஷெல், சாய்வான ஃரூப்லைன் போன்ற ஏராளமான வசதிகளுடன் வருகிறது.

விலை:

இந்த கார் சுமார் ரூ. 6-8 லட்சம் விலையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.