2016 INTERMOT – இதோ 2017 கவாஸகி நின்ஜா H2!
2017 ஆம் ஆண்டிற்கான நின்ஜா H2 தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் 2016 INTERMOT ஷோவில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. நின்ஜா H2 சில எலெக்ட்ரானிக் மாற்றங்களையும், புதிதாக நின்ஜா H2 கார்பன் லிமிட்டட் எடிசனையும் அறிமுகம் செய்துள்ளது.
இந்த வருடத்தில் அதிகம் தேடப்பபட்ட மாடல்களுள் ஒன்றான கவாஸகி நின்ஜா H2, எராளமான ரசிகர்களை கொண்டிருப்பதால் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பின்புற TTX மோனோஷாக் சஸ்பென்சனுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எளிதாக அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும் மேலும் அதிவேகத்தில் சிறந்த நிலைதன்மையை அளிக்கும் விதமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக கவாஸகி தெரிவித்துள்ளது.
மேலும் நின்ஜா H2 பேங்க் ஏங்கிள் டிஸ்பிளே(Bank Angle Display) தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இது பந்தய சாலையிலோ அல்லது சாதாரணமாகவோ பைக் சாய்ந்த நிலையில் மிகத் துல்லியமாக பைக் எந்த அளவு சாய்ந்துள்ளது என்ற தகவலை அளிக்கவல்லது. இதற்காக ராபார்ட் போஸ் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட 6-axis IMU தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கவாஸகி தெரிவித்துள்ளது.
புதிதாக கன்சர்னிங் ஏபிஎஸ்(ABS) சேர்க்கப்பட்டுள்ளது. என்ஜினில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் யூரோ 4 மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளின் படி மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் நின்ஜா H2 கார்பன் ஸ்பெசல் எடிசனும் INTERMOT ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் கார்பன் உமிழ்வு அளவை குறைப்பதற்காக சிஎப்ஆர்பி(CFRP) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. H2 கார்பன் கூடுதலாக மேட் ஃபினீஸூடன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த நின்ஜா H2 கார்பன் ஸ்பெசல் எடிசன் வெறும் 120 யூனிட்டுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2017 நின்ஜா H2 இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரலாம். ஆனால் மிகக்குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்படும் என கவாஸகி தெரிவித்துள்ளது.
You may also like this: இந்திய சாலைகளை தெறிக்கவிடப்போகும் டுகாட்டி டியாவெல்!
