பிரேசிலில் விற்பனையை தொடங்க போகும் ஜீப் கம்பாஸ்
பியட் கிரைஸ்லர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜீப் இந்தியாவில் தனது பிரபலமான மார்கஸ் தி ரேங்குலர் மற்றும் கிராண்ட் செரோக்கி மாடலுடன் அறிமுகமானது. இவை பிரிமியம் ரகங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரேங்குலர் மாடல் ரூபாய் 79,59 லட்சம் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. இவை லக்சரி பிராண்டுகளான BMW, Audi, Benz போன்ற மாடல்களின் கலவையாக காட்சியளிக்கின்றன. மேலும் ஜீப் நிறுவனம் இந்தியாவிற்கு என பிரத்கேயமான மாடல்களை அறிமுகப்படுத்த போவதாக தெரிவித்துள்ளது.
அநேகமாக பெரியதாக எதுவும் காத்திருக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் ஏற்கெனவே கயானா, பெர்னாம்புகோ மற்றும் பிரேசில் போன்ற பகுதிகளில் உற்பத்தி தொடங்கி விட்டது. மேலும் இந்த SUV மாடல் 17 வகையான ப்யூல் எபிசியண்ட் வசதிகளுடன் 100 நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களை சென்றடைய இருக்கிறது.

இந்தியாவில் ஜீப் கம்பாஸ் மாடல் பூனேவில் உள்ள ரன்ஜன்கான் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு 2017 ஆண்டு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜீப் கம்பாஸ் மாடலைப் பற்றி மேற்கொண்டு தகவல்கள் ஏதும் கிடைக்காத நிலையில் வரும் 2016 லாஸ் ஏன்ஜலெஸ் நகரில் நடக்கும் ஆட்டோ ஷோவில் முதலில் வெளியாகும் என்று பியட் தெரிவித்துள்ளது.
ஜீப் கம்பாஸ் இந்தியாவில் 2 லிட்டர் மல்டிஜெட் ।। என்ஜின் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தரும் வகையில் மேம்படுத்தப்படும். உலகம் முழுவதும் 5 சீட்டர் மாடலாக அறிமுகமாகும் இந்த ஜீப் இந்தியாவில் 7 சீட்டராக அறிமுகப் படுத்தப்படலாம் எனவும், ரூபாய் 20 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
