ஜாவா பெராக் பைக்கின் டெலிவரி விரைவில் ஆரம்பம்!
ஜாவா நிறுவனத்தின் பெராக் பைக்கின் முன்பதிவு கடந்த 2019 நவம்பர் அன்று தொடங்கியது. ஊரடங்கு தடை உத்தரவுகளால் தயாரிப்பு பகுதியில் ஆட்கள் பற்றாக்குறை மற்றும் தேவையான பொருட்கள் சரிவர கிடைக்காததால் இந்த பைக்கை புக்கிங் செய்தவர்களுக்கு டெலிவரி செய்யப்படவில்லை.
தற்போது உள்ள தளர்வுகளால் இந்த பைக்கின் டெலிவரி விரைவில் ஆரம்பமாகும் என ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த மாடல் பைக்கில் சில மாற்றங்களை செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதன்படி, சஸ்பென்ஷன் மற்றும் சாஸிஸ் அமைப்பு இன்னும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் வட்டமான முகப்பு விளக்குகள், நீண்ட ஹேண்டில் பார், எல்.இ.டி டெயில் விளக்குகள், இரட்டை எக்ஸாஸ்ட் பைப்புகள், இரட்டை சேனல் ஏ.பி.எஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த பைக் 35 கி.மீ/லி மைலேஜ் தரும்.
மற்ற இரண்டு ஜாவா மாடல்களைக் காட்டிலும் சற்றே பெரிய எஞ்சின் உள்ளது, எனவே பெராக் சிறந்த டாப்-எண்ட் செயல்திறனை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் ஆன்-ரோடு விலை ரூ.2.05 லட்சம் ஆகும். மேலும் இந்த பைக்கிற்கு டவுன் பேமென்ட் எதுவும் இல்லாமல் 100 % ஈ.எம்.ஐ கடன் வசதியும் செய்து தருகிறது.



