28 உயிர்களை பறித்த ஸ்மார்ட் கீ தொழில்நுட்பம்!!!
ஸ்மார்ட் கீ தொழில்நுட்பம் கொண்ட கார்கள் நீண்ட நேரம் காற்றோடாமில்லாத இடங்களில் இயக்கதிலேயே நிறுத்தி வைக்கும் போது வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு வாயுவினால் இதுவரை அமெரிக்காவில் மட்டும் 28 மரணங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ஸ்மார்ட் கீ தொழில்நுட்பம் மெர்ஸிடஸ் பென்ஸில் 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் ஆடம்பர ரக கார்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் படிப்படியாக அனைத்து கார்களிலும் பயன்படுத்த புகுத்தப்பட்டது. தற்போது சமீபத்திய ஆய்வு ஒன்றில் 2006 ல் இருந்து இத்தொழில்நுட்பத்தினால் அமெரிக்காவில் மட்டும் 28 மரணங்களும், 45 பேர் மூளை சம்பந்தப்பட்ட பாதிப்புகளை அடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
You may also like this : ரெனோ க்விட் AMT 4.25 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது!!
பெரும்பாலும் தற்போதைய நவீன கார்களில் என்ஜின் இயக்கத்தில் உள்ளதா இல்லயா என்பதே தெரியாத அளவிற்கு கேபின் நிசப்தமாக உள்ளதும் மேலும் சாவீக்கான அவசியமே இல்லாததால் எஞ்ஜினை அணைக்க மறந்து சென்று விடுவதும் முக்கிய காரணங்களாக கூறப்பட்டுள்ளது. மேலும் காற்றோட்டமில்லாத இடங்கள் கார்பன் மோனாக்சைடு வாயுவின் வீரியத்தை அதிகப்படுத்தி சூழ்நிலையை மோசமாக்குகிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆடோமொபைல் துறை பரிந்துரையின் படி இதொழில்நுட்பம் கொண்ட வாகனங்களில் என்ஜின் அணையாமல் இருக்கையில் எச்சரிக்கை செய்யும் வகையில் கருவிகளை பொருத்தலாம் என பரிந்துரைகப்பட்டுள்ளது. ஃபோர்ட் உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஏற்கனவே இக்குறையை சரிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
