உங்கள் கார் அல்லது பைக்கில் சானிடைசர் வைத்திருக்கிறீர்களா? எச்சரிக்கை!
பைக், கார்கள் பெரும்பாலும் பெட்ரோல் அல்லது டீசல் கொண்டு இயங்குபவை, இந்த எரிபொருள்கள் எளிதில் தீ பற்றிக்கொள்ளும். இதனால் தான் பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்பும்போது செல்போனில் பேசக்கூடாது என எச்சரிக்கப்படுகின்றனர். ஏனென்றால், செல்போன் சிக்னல்களால் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.
தற்போது உள்ள வைரஸ் பரவலின் காரணமாக, அனைவரும் சேனிடைசர்களை பயன்படுத்துமாறு அரசாங்கம் பரிந்துறை செய்துள்ளது. இந்த சானிடைசர்கள் ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இது எளிதில் தீப்பற்றக்கூடும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பைக்கை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்த போது மற்றும் பெட்ரோல் நிரப்பும்போது டேங்க் கவரில் சானிடைசர் இருந்ததால் பைக்கில் தீப்பிடித்தது.
சானிடைசர்களில் 60-75 % ஆல்கஹால் உள்ளது, எனவே வெப்பநிலையில் சில டிகிரிகள் கூடினாலே தீ பற்றிக்கொள்ளும். வாகனங்களின் செயல்பாட்டால் உண்டாகும் வெப்பநிலையால் கண்டிப்பாக சானிடைசர்களால் தீ ஏற்படும்.
எனவே சேனிடைசர்களை பைக் டேங்க் கவரிலோ அல்லது காரின் டேஷ் போர்டிலோ வைக்க வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு வைக்கும் போது கார் மற்றும் பைக்கில் எளிதில் தீபற்ற வாய்ப்புள்ளது.

எனவே சேனிடைசர்களை வாகனங்களில் எடுத்து செல்வதை தவிர்க்கலாம், இதற்கு பதிலாக கையுறைகளை பயன்படுத்தலாம். வாகனங்களை சேனிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம், அதற்கு பதிலாக சோப்பு கலந்த தண்ணீர் அல்லது கிருமி நாசினியை பயன்படுத்தலாம்.
