காரில் நல்ல மைலேஜ் கிடைக்கலயா? இந்தப் பிரச்சனையா இருக்கலாம்!
அனைவருக்கும் தான் வைத்திருக்கும் கார் நல்ல மைலேஜ் தரவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் பலரின் கார் எதிர்பார்க்கும் அளவு மைலேஜ் தருவதில்லை. நல்ல மைலேஜ் கிடைக்க சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.
1.காலையில் எரிபொருளை நிரப்புங்கள்
ஆம், காலையில் நிலவும் குளிர்ந்த தட்பவெப்ப சூழ்நிலையால் எரிபொருளின் அடர்த்தி நல்ல நிலையில் இருக்கும், அதிக வெப்பநிலையால் எரிபொருள் ஆவியாவது தடுக்கப்படும். எனவே எரிபொருள் குறையாது நல்ல மைலேஜ் கிடைக்கும்.
2.டயருக்கான சரியான காற்று அழுத்தத்தை (பிரஷர்) வையுங்கள்
உங்கள் காரின் மைலேஜை மேம்படுத்துவதில் சரியான டயர் அழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் கார் உற்பத்தியாளரின் பரிந்துரைக்கப்பட்ட டயர் அழுத்தத்தை நீங்கள் வைக்க வேண்டும். சரியான டயர் அழுத்தம் இல்லாத கார் சராசரி அளவை விட கிட்டத்தட்ட 10-15% சதவீதம் குறைந்த அளவு மைலேஜ் தரும்.

3.கார் ஓடாத நேரங்களில் காரை ஆப்ஃ செய்யுங்கள்
டிராபிக் நேரங்களில் அல்லது வேறு ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஒரு நிமிடத்திற்கு மேல் கார் சும்மா இருப்பைதைத் தவிர்க்கவும். இவ்வாறு ஆப்ஃ செய்யாதபோது பெட்ரோல் செலவாகும் ஆனால் கார் 1 கி.மீ கூட ஓடியிருக்காது. எனவே கார் ஓடாத நேரங்களில் காரை ஆப்ஃ செய்யவும். ஸ்டார்ட்-ஸ்டாப் தொழில்நுட்பத்துடன் உங்களிடம் கார் இருந்தால், அதனைப் பயன்படுத்தலாம்.
Also read : யமாஹா RX 100 மீண்டும் அறிமுகம்?
4.காரை சர்வீஸ் செய்யுங்கள்
காரை பரிந்துரைக்கப்பட்ட நேரங்களில் சர்வீஸ் செய்வது அவசியம். ஏனென்றால், என்ஜின் மற்றும் கூலன்ட் ஆயில்களின் அளவு, ஏர் மற்றும் எரிபொருள் பிள்டர்ஸ் இவற்றை சரியான அளவுகளில், நல்ல நிலையில் வைத்திருந்தால் கார் நல்ல மைலேஜ் தரும். எனவே சர்வீஸ் மிக முக்கியமான ஒன்று.
5.காரை நிழலில் நிறுத்திவையுங்கள்
இந்தியாவின் கோடை காலங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட 50 டிகிரி அளவுக்கு இருக்கும். இதனால் காரின் உட்பகுதி இன்னும் வெப்பமாக இருக்கும், மீண்டும் தாங்கக்கூடிய அளவிற்கு காரின் உட்பகுதியை குளிர்விக்க காரின் ஏ.சி முழு சக்தியுடன் வேலை செய்யும் சிறிது நேரம் ஆகும். இதன் விளைவாக எரிபொருள் வீணாகும். மைலேஜ் குறைவாக கிடைக்கும். எனவே ஒரு நிழலின் கீழ் நிறுத்துங்கள். நல்ல மைலேஜ் கிடைக்கும்.

மேலே உள்ள டிப்ஸ்-ஐ செய்துபாருங்கள் நிச்சயம் நல்ல மைலேஜ் கிடைக்கும். வேறு ஏதாவது டிப்ஸ் இருந்தால் கீழே உள்ள கமெண்ட் பகுதியில் தெரிவிக்கவும்.
Also read : இப்படில்லாம் கார் ஓட்டினா செலவு கன்ஃபார்ம்!!
