2016 EICMA : புதிய மாற்றங்களுடன் ஹோண்டா CBR 650F!

புதிய ஹோண்டா CBR 650F புதிய மேம்படுத்தப்பட்ட என்ஜின் மாறுதல்களுடன் அறிமுகம் இத்தாலியில் நடைபெறும் EICMA மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது புதிய ஹோண்டா CBR 650F தோற்றத்தில் எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லை. ஆனால் ஹோண்டா எஞ்சினியர்கள் மெக்கானிக்கல் அப்டேட்டுகளில் கவனம் செலுத்தியுள்ளனர். புதிய ஹோண்டா CBR 650, 649 சிசி திறன் கொண்ட இன்லைன் 4 மோட்டாரை கொண்டுள்ளது.

2017-honda-cb650-f

இந்த என்ஜின் முன்பை விட 4பிஸ் பவர் அதிகமாக்கப்பட்டு தற்போது 90பிஸ் பவரை வெளிப்படுத்தும் எனவும் 5000 ஆர்பி எம் மிற்கு மேல் இந்த எக்ஸ்ட்ரா பவர் வெளிப்படும் எனவும் ஹோண்டா தெரிவித்துள்ளது. மேலும் அதிகவேகத்தில் எக்ஸாஸ்டில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க டூயல் பாஸ் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டு அக்சிலரேட்டிங் ரேசியோ குறைக்கப்பட்டு உள்ளது. டார்க்கும் 64என்எம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 350கிமீ ரேன்ஜ் கொண்ட பெட்ரோல் டேங்க் கொண்ட ஹோண்டா CBR 650F 20கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017-honda-cb650f-pic

ஹோண்டா CBR650F தற்போது 41மிமீ ஷேவ்வா டூயல் பெண்டிங் வால்வ்(SDBV) போர்க்குகளை கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறந்த பயண அனுபவம் மற்றும் கையாளுமை பெறும். மேலும் பின்புறம் பிரிலோடு அட்ஜஸ்டபுள் மோனோ ஷாக் சஸ்பென்ஷனை கொண்டுள்ளது.

அதே போல் பிரேக்கிங் சிஸ்டமும் மேம்படுத்தப்பட்ட ட்வின் பிரண்ட் நிஸின் கேலிபர்களுடன் ABS சிஸ்டம் நிரந்தர அம்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.ஹோண்டா CBR 650F CKD முறையில் இந்தியாவில் 2017 ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .