தாறுமாறு எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களை வழங்கும் ஹோண்டா நிறுவனம்

ஹோண்டா நிறுவனம் கடந்த மாதம் அறிவித்தது போலவே இந்த மாதமும் அதிரடியாக தள்ளுபடிகள், எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி , எக்ஸ்சேன்ஜ் மற்றும் இதர ஆஃபர்களை அமேஸ், சிட்டி மற்றும் சிவிக் மாடல்களுக்கு வழங்குகிறது.

ஹோண்டா அமேஸ்:

  1. அமேஸ் மாடலில் உள்ள அனைத்து கார்களுக்கும் ரூ.27,000 வரை தள்ளுபடி கிடைக்கும்
  2. பழைய கார்களை எக்ஸ்சேன்ஜ் செய்யும்போது 2 வருட வாரன்டி கூடுதலாக கிடைக்கிறது, மேலும் ரூ.15,000 வரை எக்ஸ்ட்ரா தள்ளுபடி கிடைக்கும்.

ஹோண்டா சிட்டி (4-ஜென் மாடல்):

  1. ஹோண்டா சிட்டி ZX MT வேரியன்டுக்கு ரூ. 80,000 தள்ளுபடியும், ZX CVT வேரியன்டுக்கு ரூ. 1.6 லட்சம் வரை தள்ளுபடியும், இரண்டிற்கும் எக்ஸ்சேன்ஜ் போனஸாக ரூ.50,000 வரை கிடைக்கும்.
  2. மற்ற மாடல்களுக்கு ரூ.25,000 – ரூ. 55,000 வரை தள்ளுபடி உண்டு.

ஹோண்டா சிட்டி, விலை, மைலேஜ், வேரியண்ட் மற்றும் தொழில்நுட்ப விவரங்கள்

ஹோண்டா சிவிக்:

 

  1. டீசல் வேரியன்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி
  2. பெட்ரோல் வேரியன்டுக்கு ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி

இந்த தள்ளுபடி ஆஃபர்கள் ஆகஸ்ட் 31,2020 வரை மட்டுமே இருக்கும். ஹோண்டாவின் ஆன்லைன் வெப்சைட்டில் புக்கிங் செய்தால் இந்த ஆஃபர்களை பெறலாம்.

இப்படில்லாம் கார் ஓட்டினா செலவு கன்ஃபார்ம்!!