ஹோண்டா பிரியோ ஃபேஸ்லிஃப்ட் 4.69 லட்சம் விலையில் அறிமுகம்!

ஹோண்டா புதிய பிரியோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல் 4.69 லட்சம் என்ற குறைந்த விலையில் அதே சமயம் மிகச்சரியான விலையில் களமிறங்கியுள்ளது கவனிக்கத்தக்கது. அதே போல் புதிதாக நிறைய வசதிகளும் கொடுக்கப்பட்டிருப்பது இந்த செக்மண்டில் மற்ற மாடல்களுக்கு மிகப்பெரிய போட்டியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

பேஸ் வேரியண்டான E MT 4.69 லட்சம்(எக்ஸ் ஷோரூம்,டெல்லி) விலையிலும் டாப் வேரியண்டான VX AT 6.81 லட்சம்(எக்ஸ் ஷோரூம்,டெல்லி) விலையிலும் கிடைக்கிறது.

வெளிப்புறம் பிரியோவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை பார்க்க முடிகிறது. ஹோண்டா அமேஸில் பார்த்த அதே புதிய முன்புற பம்பர்கள், கருப்பு மற்றும் க்ரோம் ஃபினிசிங் போன்றவை ஃப்ரெஸான தோற்றத்தை தருகின்றன. அதே போல் பின்புறத்திலும் புதிதாக டிசைன் செய்யப்பட்ட எல்இடி விளக்குகள், ஸ்பாய்லர்கள் மற்றும் ஹை மௌன்ட் ஸ்டாப் லைட் போன்றவை ஸ்போர்ட்டி லுக்கை எதிர்பார்ப்பவர்களுக்கு நிறைவை தரும்.

honda-brio-facelift-2016-interior-yenthiran

உட்புறத்தை பொருத்தவரை பொதுவாக பீஜ் வண்ணத்திலும் மற்றும் டாப் வேரியண்ட்டில் ஸ்போர்ட்டி பிளேக் வண்ணத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர் முற்றிலுமாக புதிதாகவும் மேம்படுத்தப்பட்ட டிரிப்பிள் அனலாக் மற்றும் ஸ்போர்ட்டி மீட்டர் போன்ற ஆப்சன்ளுடன் மாற்றப்பட்டுள்ளது.

2 டின் ஆடியோ சிஸ்டம் USB, AUX-In மற்றும் Bluetooth வசதிகளுடன் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேபினுக்குள் உடனடி குளிர்ச்சியை வழங்கும் வகையில் மேக்ஸ் கூல் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

honda-brio-facelift-2016-interior-beige

என்ஜின் மற்றும் பவரில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே 1.2 லிட்டர் ஐ-விடெக்(i-VTEC) பெட்ரோல் என்ஜின் 88 பிஎஸ் பவரையும் 109 என்எம் டார்க்கையும் வழங்கும். ஸ்டாண்டர்டு வேரியண்டில் 5 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஸனும், டாப் வேரியண்டில் 5 ஸ்பீடு ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஸனும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேனுவல் வேரியண்ட் 18.5 கிமீ/லி மைலேஜையும் ஏஎம்டி வேரியண்ட் 16.5 கிமீ/லி மைலேஜையும் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ACE(Advanced Compatibility Engineering) பாடி கட்டமைப்பு, SRS இரட்டை ஏர்பேக்குகள், எபிஎஸ்(ABS), இபிடி(EBD), ஸீட்பெல்ட் ப்ரீ டென்ஸ்னர் மற்றும் புதிதாக பாதசாரிகளுக்கான பெடேஸ்டேரியன் இன்ஜுரி மிடிகேசன் டெக்னாலஜி(Pedestrian Injury Mitigation Technology) போன்றவை வரவேற்கதக்க அம்சங்கள்.

இந்த பிரியோ ஃபேஸ்லிஃப்ட் 2 வருடம் அல்லது 40,000 கிமீ வராண்டியுடன் ஐந்து வண்ணங்களில்(Taffeta White, Alabaster Sliver, Urban Titanium, Rally Red and White Orchid Pearl) கிடைக்கிறது.

மேலும் ஹோண்டா பிரியோ ஃபேஸ்லிஃப்ட் அதன் செக்மென்ட்டில் டொயோட்டா எடியோஸ் லிவா, ரெனோ பல்ஸ், நிஸான் மைக்ரா, ஹுண்டாய் கிராண்ட் ஐ10 செவர்லே பீட், போர்டு பிகோ மற்றும் மாருதி சுசூகி ரிட்ஸ் போன்ற ஏகப்பட்ட போட்டியாளர்களை கொண்டுள்ளது .

விலை பட்டியல் இதோ!

வேரியண்ட் விலை
E MT 4.69 லட்சம்
S MT 5.20 லட்சம்
VX MT 5.95 லட்சம்
VX AT 6.81 லட்சம்