வண்டிக்கான ஆவணங்கள் காலாவதியாகி விட்டதா ? கவலை வேண்டாம் டிசம்பர் 31, 2020 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தற்போது பரவி வரும் வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது, இதனால் பல இடங்களுக்கு எளிதில் செல்ல முடியாது மற்றும் குறைந்த அளவு பணியாளர்கள் மட்டுமே வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த காரணங்களால்  சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது தொடர்ந்து மூன்றாவது முறையாக வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களின் கால அவகாசத்தை இந்த ஆண்டு 2020 டிசம்பர் 31 வரை நீட்டித்துள்ளது.

இதன்படி 2020 பிப்ரவரி மாதத்திலிருந்து இன்று வரை காலாவதி ஆன அனைத்து ஆவணங்களும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும், ஏற்கனவே ஜீலை மற்றும் செப்டம்பர் வரை நீட்டித்தது, தற்போது மூன்றாவது முறையாக டிசம்பர் வரை நீட்டித்துள்ளது.

டிரைவிங் லைசன்ஸ், இன்சூரன்ஸ், வாகன பதிவு, பர்மிட்ஸ், தர சான்று ஆகியவை டிசம்பர் 31, 2020 வரை செல்லும்.

இந்தியாவில் தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில் இந்த அறிவிப்பால் பல வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர், வாகனங்களை வைத்து தொழில் செய்பவர்களும் டிசம்பர் வரை கவலை இல்லாமல் வாகனங்களை இயக்கலாம். மேலும் ஆவணங்களை புதுப்பிக்க அலுவலகங்களில் அதிக கூட்டமும் சேராது.