இந்திய சாலைகளை தெறிக்கவிடப்போகும் டுகாட்டி டியாவெல்!

இத்தாலியை சேர்ந்த சூப்பர் பைக் நிறுவனமான டுகாட்டி முதன் முறையாக முற்றிலும் க்ரூஸர் வகையை சேர்ந்த மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தனது ஆஸ்தான போட்டியாளர்களான ஹார்லீ டேவிட்சன் மற்றும் இண்டியன் மோட்டார்சைக்கிள் போன்ற நிறுவனங்களின் போட்டியை எளிதாக எதிர்கொள்ள முடியும் என நம்புகிறது.

ducati-xdiavel-s-topview

டுகாட்டி தனது மாடல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு தற்போது டியாவெல் மற்றும் டியாவெல் எஸ் ஆகிய மாடல்களை களமிறக்குகிறது. இவை இரண்டும் முறையே ரூ15.87 லட்சம்(எக்ஸ் ஷோரூம், டெல்லி) மற்றும் 18.47 லட்சம்(எக்ஸ் ஷோரூம், டெல்லி) ஆகிய விலைகளில் கிடைக்கிறது. மேலும் இந்த க்ரூஸர் மாடல் கடந்த ஆண்டு 2015 ல் இஐஎம்சிஎ(EIMCA) வில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாடல்தான் இந்நிறுவனத்தால் பெல்ட் ட்ரைவ் சிஸ்டத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மாடலாகும். அறிமுகத்தை தொடர்ந்து தற்போது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து டீலர்ஷிப்களிலும் புக்கிங்கள் தொடங்கியுள்ளன.

ducati-xdiavel-center-console

டுகாட்டியின் புதிய தோற்றம் சாலையில் பிசிறடிக்கிறது. குறிப்பாக சொல்லப் போனால் முன்புறம் குறுக்கு நெடுக்கான ஃப்ரேம் புஸ்டியான சீறும் தோற்றத்தை தருகிறது. மிடுக்கான தோற்றத்திற்காவே கூலிங் சிஸ்டம் மற்றும் இரட்டை குழல் புகைபோக்கிகள் போன்றவை ஃப்ரேமை விட்டு வெளியே தெரியாத வண்ணம் உட்புறமே கொடுக்கப்பட்டுள்ளது. டியாவெல் மாடலுக்கு முழு எல்இடி முகப்பு விளக்கும், டியாவெல் எல்இடி விளக்குடன் யூ வடிவ பகல் நேர ரன்னிங் விளக்கும் கூடுதல் அம்சமாக கிடைக்கிறது.

ducati-xdiavel-s-yenthiran

இரு மாடல்களிலும் புத்தம் புதிய எல் வடிவ டுகாட்டி டேஸ்ட்டாடிரேட்டா டிவிடி(Testastretta DVT) 1262சிசி என்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் 9500ஆர்பிஎம் வேகத்தில் 160பிஎஸ் பவரையும் 5000 ஆர்பிஎம் ல் 129 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும் வல்லமை கொண்டது. குறிப்பாக இந்த என்ஜின் குறைந்த வேகத்திலும் அதிக டார்க்கை அளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட பட்டியல் போடுமளவிற்கு வசதிகளை கொண்ட இந்த மாடலில் குறிப்பாக டிஎஃப்டி(TFT ) திரையை கொண்ட இன்ஸ்ட்ரூமண்ட் கன்சோல், டுல்காட்டி பவர் லாஞ்ச், டுகாட்டி ட்ரேக்சன் கன்ட்ரோல், எபிஎஸ், கீலெஸ் இக்னிசன், க்ரூஸ் கன்ட்ரோல், புளூடூத் போன்றவை குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள்.

ducati-xdiavel-s-tail

க்ரூஸர் மார்க்கெட்டில் தற்போதுள்ள ஆஸ்தான நாயகர்களான ஹார்லி டேவிட்சன் மற்றும் இந்தியன் மோட்டோர்சைக்கிள் போன்றவற்றிற்கு மிகப்பெரிய போட்டியை கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.